Chillzee சமையல் குறிப்புகள் - சீரக சாதம்
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.
இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள்
1 கப் பாஸ்மதி அரிசி
3 கப் தண்ணீர்
உப்பு
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் / நெய்
1 பெரிய வெங்காயம்
2 டீஸ்பூன் சீரகம்
1/2 கப் தண்ணீர்
கொத்தமல்லி இலைகள்
செய்முறை
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, முக்கால் பாகம் வேகவைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில், எண்ணெய் / நெய் ஊற்றி, சூடாக்கி, வெங்காயம் சேர்க்கவும்.
பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் சீரகம் சேர்க்கவும்.
ஜீரகம் நன்கு வறுப்பட்ட உடன் வேக வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
அனைத்து தண்ணீரும் காய்ந்து போகும் வரைசிம்மில் வைக்கவும்.
2 முதல் 3 நிமிடங்கள் விட்டிருந்து, கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து குழம்பு மற்றும் பதார்த்தங்களுடன் பரிமாறுங்கள்.