(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை சாதம்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

200 கிராம் பாஸ்மதி அரிசி

2 கப் தண்ணீர் அல்லது காய்கறி வேக வைத்த நீர்

150 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலை

30 கிராம் நெய்

1 டீஸ்பூன் சீரகம்

உப்பு

100 கிராம் வெங்காயம்

1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

1 பட்டை

2 டேபிள் ஸ்பூன் வறுத்து, உடைத்த முந்திரி

  

செய்முறை

ரிசியை கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து ஒதுக்கி வைக்கவும்.

 

குக்கரில் நெய்யை சூடாக்கவும்.

 

சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, நன்றாக வதக்கவும்.

 

பின் அரிசி சேர்த்து கிளறவும்.

 

இப்போது கொண்டைக்கடலை, தண்ணீர்,  மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

 

பிரஷர் குக்கரின் மூடியை மூடி, ஒரு விசில் விட்டு எடுக்கவும்.

   

தயிர் அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாறவும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.