(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஹெல்தி வெண்டைக்காய் பொரியல்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

  

பொதுவாக வெண்டக்காய் பொரியல் செய்யும் போது வெண்டைக்காயில் இருந்து வரும் பிசுபிசுப்பிற்காக அதிக எண்ணெய் பயன்படுத்தி, ‘ஹை’யில் வைத்து சமைப்பது வழக்கம்.

ஆனால் ஆரோக்கியமான முறையில் குறைந்த எண்ணெய் பயன்படுத்தி, நான்ஸ்டிக் பானிலும் வெண்டக்காய் பொரியல் செய்ய முடியும்.   

தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் எண்ணெய்

½ டீஸ்பூன் கடுகு

½ டீஸ்பூன் சீரகம்

8 -10 புதிய கறிவேப்பிலை

1 பெரிய வெங்காயம் - மெல்லியதாக வெட்டப்பட்டது

½ கிலோ வெண்டக்காய் – சின்ன துண்டுகளாக நறுக்கப்பட்டது

2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

உப்பு – சுவைக்கு ஏற்ப

½ டீஸ்பூன் மஞ்சள் தூள்

  

செய்முறை

ரு பெரிய நான்ஸ்டிக் வாணலியில் எண்ணெயை சூடாக்கவும்.

 

கடுகை சேர்த்து அது வெடித்த உடன், சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

 

நன்றாக கிளறி, சுமார் 1 நிமிடம் வரை வதக்கவும்.

 

தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். (சுமார் 5 – 10 நிமிடங்கள்)

 

வெங்காயம் நிறம் மாறியதும், வெண்டைக்காயை சேர்த்து, தீயை மீடியம் ஹை ஃப்ளேமிற்கு மாற்றவும்.

 

வெண்டைக்காயில் இருந்து பிசுபிசுப்பு வெளியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். (சுமார் 5 நிமிடங்கள்)

 

கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் சேர்க்கவும்.

 

தொடர்ந்து கிளரவும். வெண்டக்காய் ட்ரை ஆகி நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். (சுமார் 5 – 10 நிமிடங்கள்)

 

சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.