(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - உருளைக்கிழங்கு குழம்பு

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

   

தேவையான பொருட்கள்

250 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு

75 கிராம் உருளைக்கிழங்கு -  வேக வைத்து மசித்தது

1 கப் நறுக்கிய தக்காளி

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்

1 பிரிஞ்சி இலை

½ டீஸ்பூன் மிளகாய் பேஸ்ட்

½ டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்

½ டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

1 டீஸ்பூன் தனியா தூள்

கொத்தமல்லி இலைகள்

  

செய்முறை

கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.

 

சீரகம் சேர்த்து, வெடித்ததும், சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், பின் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

 

பிரிஞ்சி இலையை சேர்க்கவும்.

 

மிளகாய் பேஸ்ட், இஞ்சி பேஸ்ட் சேர்த்து, நன்றாக கிளறி, 5-6 நிமிடங்கள் மிதமான சூட்டில் சமைக்கவும்.

 

தேவையான உப்பு சேர்க்கவும். அடுத்து மிளகாய் தூள், சீரகம் தூள், தனியா தூள் சேர்க்கவும்.

மசாலாவுடன் தக்காளி நன்றாக சேருமாறு காந்து விடவும். 7-8 நிமிடங்கள் சமைக்கவும்.

 

இப்போது சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட வேகவைத்த உருளைக்கிழங்கையும், மசித்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

 

2 கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும். 10 நிமிடங்கள் சிமில் வைக்கவும்.

 

நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.