(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - பட்டன் மஷ்ரூமை சுத்தம் செய்வது எப்படி?

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!  

ட்டன் காளான்கள் பெரும்பாலான உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் காளான்கள்.

பலருக்கும் அதை சுத்தப்படுத்துவது எப்படி என்ற கேள்வி இருக்கிறது.

பட்டன் காளான்களை எவ்வாறு சுத்தம் செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

 

ஒரு பரந்த பாத்திரத்தில் காளான்களை வைக்கவும்.

 

காளானை தலைகீழாக வைத்து, அதன் மேலே இருக்கும் மெல்லிய தோலை கீழே இருந்து உரித்து எடுத்து சுத்தப் படுத்தவும்.

இந்த தோலை எளிதாக அகற்ற, காளான்கள் மேலே சிறிது மாவை தெளிக்கவும்.

அனைத்து காளான்கள் மீதும் நன்றாக மாவு படுமாறு பார்த்துக் கொள்ளவும்.

மாவு பூசிக் கொண்டிருக்கும் காளானில் இருந்து தோலை எடுப்பது எளிதாக இருக்கும்.

 

அனைத்து காளான்களும் உரிக்கப்பட்டதும், அவற்றை தண்ணீரில் கழுவவும். பின் பேப்பர் நாப்கின் அல்லது சுத்தமான துணி பயன்படுத்தி துடைத்து உலர வைக்கவும்.

  

இப்போது உங்கள் காளான்கள் சமைக்க தயாராகி விட்டன.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.