(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஹெல்தி காலிஃபிளவர், பன்னீர் & பட்டாணி கறி

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!  

தேவையான பொருட்கள்

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

225 கிராம் பன்னீர் - க்யூப்ஸாக வெட்டவும்

காலிஃபிளவர் – 1 - சிறிய பூக்களாக உடைக்கவும்

2 வெங்காயம், சிறியதாக நறுக்கியது

2 பூண்டு பல்

ஜீரக தூள் – 1 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1 ஸ்பூன்

இஞ்சி துண்டு – துருவிக் கொள்ளவும்

500 கிராம் தக்காளி – மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

200 கிராம் பட்டாணி – வேக வைத்துக் கொள்ளவும்

கொத்தமல்லி இலை

  

செய்முறை

ஒரு பெரிய கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கவும்,

 

பன்னீர் சேர்த்து மிருதுவாக மாறும் வரை மெதுவாக வறுக்கவும்.

  

பன்னீரை ஜல்லிக் கரண்டியால் அகற்றி தனியே வைக்கவும்.  

 

கடாயில், மீதமுள்ள எண்ணெய் மற்றும் காலிஃபிளவர் சேர்த்து, காலிஃபிளவர் பழுப்பு நிறமாக இருக்கும் வரை சமைக்கவும்.

   

இப்போது வெங்காயம் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய்யும் சேர்க்கவும்.

  

வெங்காயம் மென்மையாக்கும் வரை வதக்கவும்.

  

நசுக்கிய பூண்டு, ஜீரக தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி சேர்த்து கிளறவும்.

  

பிறகு, தக்காளி பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறவும்.

 

தக்காளி நன்கு வெந்து அனைத்தும் நன்றாக கலந்த பிறகு 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.

   

ஒரு கொதி வந்த உடன், மூடி வைத்து வேக விடவும். காலிஃபிளவர் மென்மையாக மாறும் வரை சமைக்கவும் (15 – 20 நிமிடங்கள்).

  

இப்போது வேக வைத்த பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

 

கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

 

சாதம் / நான் ரொட்டி மற்றும் ரைத்தா உடன் சூடாக பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.