(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஹெல்தி மஷ்ரூம் – கீரை பொரியல்

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் வீட்டிலேயே இருக்கும் இந்த நாட்களில், தினம் தினம் அனைவருக்கும் பிடித்ததுப் போல உணவு தயார் செய்வது நம் முன்னே இருக்கும் பெரிய சவால்.

இந்த சவாலை எதிர்க்கொள்ள சில வித்தியாசமான சமையல் குறிப்புகளை இன்று தொடங்கி அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு பிடித்த உணவை தயார் செய்து அசத்துங்கள்!

  

தேவையான பொருட்கள்

3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

½ டீஸ்பூன் சீரகம்

2 வெங்காயம் - ஒன்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். மற்றொன்றை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும்

250 கிராம் மஷ்ரூம் (காளான்கள்)

கீரை

½ டீஸ்பூன் கரம் மசாலா

1 பூண்டு பல்

1 டேபிள் ஸ்பூன் துருவிய இஞ்சி

1 சிறிய பச்சை மிளகாய்

½ டீஸ்பூன் மஞ்சள் தூள்

  

செய்முறை

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சீரகத்தை சேர்க்கவும். சில நொடிகள் வெடிக்க விடவும்.

 

பிறகு சிறிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் காளான்களைச் சேர்த்து, அடிக்கடி கிளறி, வெங்காயம் மென்மையாக, பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் (10 நிமிடங்கள்)

  

கரம் மசாலா சேர்த்து கலக்கவும்.

 

நசுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும்.

  

பின்னர் கீரையை சேர்க்கவும்.

  

உப்பு சேர்த்து, கீரை வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.

 

பின்னர் ஜல்லிக் கரண்டி பயன்படுத்தி வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

 

மீதமிருக்கும் எண்ணெயை சூடாக்கி நீளமாக நற்க்கிய வெங்காயம், மஞ்ச தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வறுக்கவும்.

 

வருத்த வெங்காயத்தை வேகவைத்த கீரை – காளான் மீது தூவி சூடாக யை சூடாக பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.