(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - கொண்டைக்கடலை கீரை மசாலா

தேவையான பொருட்கள்

3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 பெரிய வெங்காயம்

4 பூண்டு பல்

இஞ்சி 1 இன்ச்

1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்

1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டேபிள்ஸ்பூன் சீரகம் தூள்

1/4 - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்

1.5 கப் அரைத்த தக்காளி விழுது

2.5 கப் வேக வைத்த கொண்டைக்கடலை

100 கிராம் கீரை

உப்பு – தேவைக்கு

1 டீஸ்பூன் சர்க்கரை

1 டீஸ்பூன் கரம் மசாலா

1.5 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு

1/4 - 1/2 கப் தேங்காய் பால் (விருப்பம் இருந்தால் சேர்க்கவும்)

1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

  

செய்முறை

பூண்டு மற்றும் இஞ்சியை நசுக்கி அல்லது துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை சூடாக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

 

பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து 1-2 நிமிடங்கள் சமைக்கவும். அடிக்கடி கிளற வேண்டும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை தொடர்ந்து வதக்கவும்.

 

இப்போது கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், சீரகம் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்கள் தொடர்ந்து வதக்குங்கள். அடிக்கடி கிளறி விடுங்கள்.

 

பிறகு அரைத்த தக்காளி விழுது, கொண்டைக்கடலை மற்றும் ½ கப் தண்ணீர் சேர்க்கவும். குழம்பு ஒரு முறை கொதித்த உடன் சிம்மில் வைக்கவும். 10 நிமிடங்கள் அப்படியே தொடர்ந்து சமையுங்கள். அவ்வப்போது கரண்டியால் கிளறி விடுங்கள்.

 

பின், உப்பு, சர்க்கரை, கீரை சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடுங்கள்.

 

கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் பால் (வேண்டுமென்றால்) சேர்த்து கிளறவும்.

 

மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை போட்டு சூடாக பரிமாறவும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் சுவையாக இருக்கும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.