(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு 1 1/2 கப்

தேங்காய் - 1 கப்

வெல்லம் - 1 கப்

ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்

உப்பு – தேவைக்கு

  

செய்முறை

வெல்லத்தையும், 3 டேபிள் ஸ்பூன் தண்ணீரையும் குறைந்த தீயில் வைத்திருக்கும் பேனில் ஒன்றாக கலக்கவும்.

தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கவும்.

வெல்லம் தண்ணீரில் கரைந்த உடன், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டவ்வில் ஒரு கடாயை வைத்து, அதில் வடிக்கட்டிய வெல்ல பாகுடன், ஏலக்காய் பொடி கலந்து ஊற்றி கொதிக்க விடவும்.

பாகு நன்றாக கொதிக்க தொடங்கிய உடன் துருவிய தேங்காயை சேர்க்கவும்.

தண்ணீர் வறண்டு போகும் வரை நன்றாக வேக வைக்கவும்.

இப்போது பூரணம் தயார். இதை தனியாக ஒரு ப்ளேட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.

அரிசிமாவை ஜலித்து எடுத்துக் கொள்ளவும்.

மாவுடன் வேண்டிய அளவு உப்பு சேர்க்கவும்.

1.25 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்கும் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் கலந்து ஒரு மர ஸ்பூனால் நன்கு கலக்கவும் (கொதிக்கும் நீர் என்பதால் சூடாக இருக்கும், கைகளால் கலக்காதீர்கள்)

ஐந்து நிமிடம் விட்டு வைத்திருக்கவும். பிறகு கைகளால் மாவை நன்றாக பிசையுங்கள்.

பிசைந்த மாவில் இருந்து சின்ன உருண்டை ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள். அதை ஒரு தட்டில் அல்லது இலையில் வைத்து கைகளால் தட்டையாக்கி கொள்ளவும்.

பூரணத்தை நடுவில் வைத்து மாவை கொழுக்கட்டை வடிவில் மூடி விடுங்கள்.

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் ஊற்றி விட்டு, கொழுக்கட்டையை வையுங்கள்.

ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூடான சுவையான கொழுக்கட்டை தயார்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.