(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி பீட்ரூட் ரைஸ்

தேவையான பொருட்கள்

1 கப் பாஸ்மதி அரிசி

1 வெங்காயம் மெல்லியதாக வெட்டப்பட்டது

1 கப் துருவிய பீட்ரூட்

1/2 கப் மிக்ஸட் காய்கறிகள் (அல்லது) பச்சை பட்டாணி (அல்லது) உருளைக்கிழங்கு

3 பச்சை மிளகாய்

1 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது

கறுவேப்பிலை

புதினா இலைகள் ஒரு கைப்பிடி

உப்பு - தேவைக்கு

2 டேபிள்ஸ்பூன் சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்

1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு

2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 டீஸ்பூன் சீரகம்

1 பிரிஞ்சி இலை

2 கிராம்பு

1 சின்ன இலவங்கப்பட்டை

2 ஏலக்காய்

1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா

  

செய்முறை

அரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும்.

 

பிரஷர் குக்கரை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

 

எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்க்கவும். நறுமணம் வரும் வரை வறுக்கவும் (~ 30 வினாடிகள்).

 

பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை (~ 1 நிமிடம்) வதக்கவும்.

 

பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து, நிறம் மாறும் வரை (~2-3 நிமிடங்கள்) வதக்கவும்

 

காய்கறி / பச்சை பட்டாணி / உருளைக்கிழங்கு, துருவிய பீட்ரூட் சேர்த்து இன்னுமொரு 2 நிமிடங்கள் சமைக்கவும்.

 

கரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

பாஸ்மதி அரிசி, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கிளறவும்.

 

குக்கரை 2 அல்லது 3 விசில்களுக்கு சமைக்கவும்.

 

குக்கர் திறந்த உடன், சாதத்தை ஃபோர்க்கால் மென்மையாக கிளறி விடவும்.

 

கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறுடன் அலங்கரிக்கவும்.

 

பீட்ரூட் ரைஸ் தயார். ரைத்தா அல்லது தயிருடன் பரிமாறவும்

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.