(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி இறால் குழம்பு

தேவையான பொருட்கள்

இறால் 500 கிராம்

சிறிய வெங்காயம் 15

தக்காளி 2 ( 1 சிறியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் சிறிது

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் சிறிது

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கறுவேப்பிலை கொஞ்சம்

சோம்பு - 1 டீஸ்பூன்

பூண்டு - 3 பல்

இலவங்கப்பட்டை - 1/4 அங்குல துண்டு

கிராம்பு 2

தேங்காய் - 1/8 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

ஜீரகம் - 1/2 டீஸ்பூன்

  

செய்முறை

சிறிய வெங்காயம் 5, பூண்டு, இலவங்கப்பட்டை, கிராம்பு, தேங்காய், தக்காளி 1 சிறியது, மிளகு, ஜீரகம் என அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட்டாக அரைக்கவும்.

 

இறால்களை கழுவி சுத்தப் படுத்தி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, மிக்ஸ் செய்து, தனியாக வைக்கவும்.

 

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கவும். கறுவேப்பிலை, சோம்பு சேர்த்து வதக்கவும்.

 

பின் மீதம் இருக்கும் சிறிய வெங்காயம் (10) சேர்த்து வதக்கவும்.

 

வெங்காயம் வதங்கிய உடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

இப்போது தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
 

தக்காளி நன்கு வதங்கி கலந்த உடன், இறால்களைச் சேர்க்கவும். 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.

 

பின் மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.

 

இறால்கள் சுருங்க ஆரம்பிக்கும் வரை வதக்கவும். இப்போது தேவையான உப்பு சேர்க்கவும்.

 

1/4 கப் தண்ணீர் சேர்க்கவும். இறால்கள் நன்றாக வெந்து மென்மையாக மாறும் வரை வேக விடவும்.

 

இறால்கள் நன்றாக வெந்த பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும். குழம்பு திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

 

நன்றாக அனைத்தும் கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் கொதிக்க விடவும்.

 

ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, சாதம் இரண்டிற்கும் இந்த குழம்பு நன்றாக இருக்கும்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.