(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - சுண்டக்காய் வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்

6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1/4 கப் சுண்டக்காய் வத்தல்

4 மிளகாய்

1/4 ஸ்பூன் வெந்தயம்

17 பூண்டு பல்

2 டீஸ்பூன் கடலை பருப்பு

1 டீஸ்பூன் உளுந்து

1 டீஸ்பூன் சீரகம்

1 டீஸ்பூன் மிளகு

2 டீஸ்பூன் தனியா

கறுவேப்பிலை

நெல்லிக்காய் அளவு புளி

1/4 டீஸ்பூன் கடுகு

1/4 டீஸ்பூன் வெந்தயம்

1/2 டீஸ்பூன் சோம்பு

10 சிறிய வெங்காயம் (நறுக்கியது)

2 தக்காளி (நறுக்கியது)

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்

2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீஸ்பூன் வெல்லம்

1/2 டீஸ்பூன் உப்பு

2 டீஸ்பூன் நல்லெண்ணெய்

பெருங்காயம் - சிட்டிகை

 

செய்முறை

ரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.

அதில் சுண்டக்காய் வத்தல் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.

வத்தல் பெரிதாகி, கலர் மாறத் தொடங்கும். ஸ்டவ்வில் இருந்து நீக்கி, வத்தலை எண்ணெயுடன் தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி,  மிளகாய், வெந்தயம், 7 பூண்டு பல், கடலை பருப்பு, உளுந்து, மிளகு, தனியா, சிறிது கறுவேப்பிலை என அனைத்தையும் சேர்க்கவும்.

3-4 நிமிடங்கள் மிகக் குறைந்த தீயில் வதக்கி ஸ்டவ்வில் இருந்து அகற்றவும்.

வறுத்த பொருட்களுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த மசாலா பேஸ்டையும் தனியாக வைக்கவும்.

ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஒரு கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து, பிழிந்து, புளி கரைசல் தயார் செய்யவும்.

ஒரு கடாயில் மீதமிருக்கும் எண்ணெயை சூடாக்கவும்.

கடுகு, வெந்தயம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கடுகு வெடித்ததும், நறுக்கிய சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு (10) சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

நறுக்கிய தக்காளி சேர்த்து வேகும் வரை வதக்கவும்.

இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் வெல்லம் சேர்க்கவும்.

மசாலாக்களை ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு புளி கரைசலை சேர்க்கவும்.

பின் உப்பு மற்றும் அரைத்த மசாலா பேஸ்ட் சேர்க்கவும். அதனுடன் ஒன்றரை கப் தண்ணீரும் சேர்த்து, குழம்பை கொதிக்க விடவும்.

முன்பு தனியாக வறுத்து எடுத்து வைத்திருந்த சுண்டக்காய் வத்தல், பெருங்காயம் சேர்த்து, சிம்மில் 20 நிமிடங்கள் வைக்கவும்.

பின் உப்பு சரியாக இருக்கிறதா என்றுப் பார்த்து ஸ்டவ்வை அணைக்கவும். பிறகு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். குழம்பை நன்றாக கலக்கி அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து விட்டு சாதத்துடன் பரிமாறவும். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.