(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - உளுந்து வடை

தேவையான பொருட்கள்

1 கப் உளுந்து

1 வெங்காயம்

1 சின்ன இஞ்சி துண்டு

15 மிளகு

3 பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

1/4 டீஸ்பூன் பெருங்காயம்

உப்பு

 

செய்முறை

ளுந்தை 4 மணி நேரம் ஊற வைத்து, நன்றாக மைய்ய  அரைக்கவும்

 

அரைத்த மாவுடன் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

எண்ணெயை கடாயில் ஊற்றி  சூடாக்கவும்.  

 

உங்கள் கைகளை லேசாக ஈரமாக்கிக் கொண்டு, மாவை வைத்து சின்ன பந்தை உருவாக்கவும்

உங்கள் கட்டை விரலால் மாவு பந்தில் சிறிய துளை செய்யுங்கள்

  

அதை எண்ணெயில் மெல்லப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுக்கவும்

 

முறுமுறுப்பான, சுவையான மெது வடை ரெடி.

தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.