(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - வெண்டக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்

250 கிராம் வெண்டக்காய்

4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1/2 டீஸ்பூன் சீரகம்

5 பூண்டு பல்

2 வெங்காயம்

2 தக்காளி

4 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்

1/2 டீஸ்பூன் கடுகு

1/2 டீஸ்பூன் உளுந்து

1/4 டீஸ்பூன் வெந்தயம்

2 மிளகாய்

கருவேப்பிலை – சிறிது

எலுமிச்சை அளவிலான புளியை 2 கப் தண்ணீரில் ஊறவைத்து புளிக் கரைசல் தயாரிக்கவும்

1/2 டீஸ்பூன் மஞ்சள்

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீஸ்பூன் சாம்பார் தூள்

1 டீஸ்பூன் வெல்லம்

உப்பு – தேவைக்கு

 

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் வெண்டக்காய் சேர்க்கவும்.

½ ஸ்பூன் உப்பு சேர்த்து சின்னத் தீயில் வைத்து 7-8 நிமிடங்கள் வறுக்கவும்.

வெண்டக்காய் வெந்த உடன் அதை ஸ்டவ்வில் இருந்து எடுத்து தனியாக வைக்கவும்.

அதே கடாயில் இன்னும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து , சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்க்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் நிறம் மாறும் இருக்கும் வரை வதக்கவும்.

பின் நறுக்கிய தக்காளி மற்றும் துருவிய தேங்காய் சேர்க்கவும்.

இன்னும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

கடையை ஸ்டவ்வில் இருந்து எடுத்து வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி வெந்தயம், உளுந்து, கடுகு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

கடுகு வெடித்தவுடன் அரைத்த மசாலா, புளி கரைசல், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், உப்பு, வெல்லம் ஆகியவற்றை சேர்க்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

கடாயை மூடி, சிம்மில் 20 நிமிடங்கள் வைக்கவும்.

பிறகு வருத்த வெண்டக்காய் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு சிம்மில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்த உடன் கடாயை ஸ்டவ்வில் இருந்து நீக்கவும்.

சுவையான வெண்டக்காய் புளிக்கிழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.