Chillzee சமையல் குறிப்புகள் - பீட்ரூட் குழம்பு
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2
துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
மிளகாய் - 5
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 “அங்குலம்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கடுகு - ¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு கடாயில், தேங்காய், சீரகம், கொத்தமல்லி, மிளகாய் மற்றும் பட்டை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, சில நிமிடங்கள் வறுக்கவும்.
அதை ஆற வைத்து, மிக்ஸியில் சிறிது தண்ணீரை சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, 1/4 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, கடுகு வெடிக்கும் வரை காத்திருக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து, அது பொன்னிறமாக மாறும் வரை சமைக்கவும்.
இப்போது அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை சமைக்கவும்.
நறுக்கிய பீட்ரூட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, ஒரு கப் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைக்கவும்.
பீட்ரூட் வெந்து மென்மையாக மாறும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
பின் சிம்மில் வைத்து, எண்ணெய் பிரியத் தொடங்கும் வரை சமைக்கவும்.
சுவையான பீட்ரூட் குழம்பு தயார். சூடான சாதத்துடன் பரிமாறவும்.