(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - சுவையான முந்திரி – தக்காளி – கேரட் பாஸ்தா

தேவையான பொருட்கள்

உங்களுக்கு பிடித்த பாஸ்தா – தேவையான அளவு

2-3 தக்காளி (மீடியம் சைஸ்)

4 கேரட்

1/4 வெங்காயம்

4 பூண்டு பல்

1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

1/ கப் முந்திரி

உப்பு - சுவைக்க

மிளகாய் தூள் – தேவைக்கு

மிளகுத் தூள் – தேவைக்கு

 

செய்முறை

ரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வேண்டிய அளவு பாஸ்தாவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவும்.

(நீங்கள் சேர்க்கும் பாஸ்தா தண்ணீரில் மூழ்க வேண்டும். அதற்கேற்ப தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்)

  

பாஸ்தாவை எட்டு நிமிடங்கள் கொதிக்கும் தண்ணீரில் கொதிக்க விட்டு நன்றாக வேக வைக்கவும்.

  

பின் வேக வாய்த்த பாஸ்தாவை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

  

தக்காளி, வெங்காயம், கேரட் அனைத்தையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு பல்லை நசுக்கி கொள்ளவும்.

  

மீடியம் ஃப்லேமில் கடாயை சூடாக்கி, ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.

  

பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  

வெங்காயத்தைச் சேர்த்து, மற்றொரு 1-2 நிமிடங்கள் வதக்கவும்.

  

கேரட் மற்றும் தக்காளி சேர்க்கவும். அடிக்கடி கிளறி, மற்றொரு 1-2 நிமிடங்கள் வதக்கவும்.

  

1/8 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது, ஃப்லேமை குறைத்து கடாயை மூடி வைக்கவும். சுமார் 15 நிமிடங்கள் அல்லது கேரட் வெந்து மென்மையாக மாறும் வரை மூடி விட்டு வேக விடவும்.

(தக்காளி சேர்த்திருப்பதால் அதிகம் தண்ணீர் தேவைப்படாது)

  

கேரட் வெந்ததும் அனைத்தையும் ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

கடைசியாக முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  

அரைத்த முந்திரி கிரீம் சாஸ் அனைத்தையும் கடாயில் ஊற்றவும்.

சாஸ் தண்ணீராக இருப்பதாக தோன்றினால் ஸ்டவ்வை சிம்மில் வைத்து கெட்டியாக 5-10 நிமிடங்கள் வைக்கவும்.

  

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

காரம் விரும்புபவர்கள் சிறிது மிளகாய் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  

பாஸ்தா சாஸ் தாயாராகி விட்டது.

ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பாஸ்தாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  

சுவையான முந்திரி – தக்காளி – கேரட் பாஸ்தா தயார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.