(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி & சிம்பிள் ப்ரெஷர் குக்கர் பிரியாணி

தேவையான பொருட்கள்

250 கிராம் மட்டன்

1 டீஸ்பூன் உப்பு

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 கப் பாஸ்மதி அரிசி

2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை எண்ணெய்

1 இலவங்கப்பட்டை

2 ஏலக்காய்

2 கிராம்பு

1 வெங்காயம்

1 தக்காளி

8 பூண்டு பல்

1 அங்குல இஞ்சி துண்டு

3 பச்சை மிளகாய்

1/4 கப் தயிர்

கொஞ்சம் புதினா இலைகள்

கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்

பாதி எலுமிச்சையின் சாறு

 

செய்முறை

அரிசியை நன்றாக கழுவி, தண்ணீரில் ஊற வைக்கவும்.

  

பிரஷர் குக்கரை எடுத்து மட்டன் துண்டுகள், உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். 1.5 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி, மீடியம் ப்லேமில் 20 நிமிடங்கள் சமைக்கவும். ஸ்டவ்விலிருந்து நீக்கி ஒதுக்கி வைக்கவும்.

 

இஞ்சியையும், பூண்டையும் விழுதாக மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

 

ப்ரெஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கி, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.

 

நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.

 

பின் சிறிதாக வெட்டப்பட்ட தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

 

அரிசியை வடிகட்டி ஸ்டவ்வில் இருக்கும் மசாலாவுடன் சேர்க்கவும்.

 

வேகவைத்த மட்டன் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

 

ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும். மட்டன் வேக விதப் போது கிடைத்த தண்ணீரையும் சேர்க்கவும்.

 

குக்கரை மூடி மீடியம் ப்லேமில் வைக்கவும். ஒரு விசில் வந்த உடன் சிம்மிற்கு மாற்றவும். அப்படியே அடுத்த விசில் வரும் வரை அல்லது 3-4 நிமிடங்கள் சமைக்கவும். பிறகு, ஸ்டவ்வை அணைத்து விடவும்.

 

சுவையான, செய்வதற்கு சுலபமான மட்டன் பிரியாணி தயார்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.