Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி கீரைப் பொரியல்
தேவையான பொருட்கள்
கீரை
எண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
உளுந்து – சிறிது
கடலைப் பருப்பு – சிறிது
வெங்காயம் – பாதி
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கீரையை கழுவி சிறிதாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு சேர்க்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
நறுக்கிய கீரை சேர்த்து மேலே சிறிய அளவு உப்பு தூவவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடிப் போட்டு கீரையை வேக விடவும்.
கீரை வெந்த உடன், மேலே தேங்காய் தூவி, கிளறி அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
சில நிமிடங்களிலேயே ரெடி ஆகி விடும் சுவையான, ஆரோக்கியமான கீரைப் பொரியல் தயார்!