(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஈஸி மட்டன் குழம்பு (Instant Pot)

தேவையான பொருட்கள்

1/2 கிலோ மட்டன்

3 டேபிள் ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்

1 பச்சை மிளகாய்

1 வெங்காயம் பெரியது

1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் அல்லது துருவல்

1/2 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் அல்லது துருவல்

1 தக்காளி

1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (தேவை என்றால்)

கொத்தமல்லி இலை – சிறிது

1/2 டீ ஸ்பூன் சீரகம்

1/4 டீ ஸ்பூன் மிளகு

5 கிராம்பு

1 இன்ச் இலவங்கப்பட்டை

1 பிரியாணி இலை

2 ஏலக்காய்

1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீ ஸ்பூன் மிளகாய் தூள்

2 டீ ஸ்பூன் கொத்தமல்லி தூள்

1 டீ ஸ்பூன் கரம் மசாலா

உப்பு – தேவைக்கு

 

செய்முறை

Instant potல் இருக்கும் SAUTE பட்டனை அழுத்தவும்.

Instant pot சூடாக சில வினாடிகள் அனுமதித்து அதில் எண்ணெய் சேர்க்கவும்.

  

சீரகம், மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

 

இப்போது நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை 4 - 6 நிமிடங்கள் வதக்கவும்.

சின்ன சின்ன இடைவெளியில் கிளறிக்கொண்டே இருங்கள்.

 

நறுக்கிய தக்காளி மற்றும் மசாலா தூள்கள் சேர்க்கவும். மற்றொரு 2 - ௪ நிமிடங்களுக்கு வதக்கவும்.

 

மட்டன் சேர்த்து கிரேவியுடன் நன்றாக கலக்கவும். சுமார் 5 நிமிடங்கள் வதக்கவும்.

 

மசாலா அடியில் பிடித்திருந்தால் அதை கரண்டியால் எடுத்து விடவும். 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.

Cancel பட்டன் அழுத்தி Saute விட்டு வெளியே வரவும்.

 

Instant pot மூடி போட்டு மூடவும். மூடி Seal நிலையில் இருப்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

30 நிமிடங்களுக்கு High pressure செட்டிங்கில் வைத்து, MEAT பட்டனை அழுத்துங்கள்.

  

அரை மணி நேரம் கழித்து Instant pot பீப் செய்யும் போது, ப்ரெஷர் தானாக வெளியாகி மூடி திறக்க காத்திருங்கள்.

 

​​பின் விருப்பம் இருந்தால் கிரேவியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.

 

கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.