(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - ஃப்ரூட் - நுடெல்லா க்ரீப்ஸ்

க்ரீப்ஸ் என்பது ஃபிரெஞ்சு உணவு வகை. இது நம் பேப்பர் ரோஸ்ட் தோசை போல மிக மிக மெல்லியதாக இருக்கும் ஒரு உணவு வகை.

தேவையான பொருட்கள்

6 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

2 பெரிய முட்டைகள்

1 பெரிய முட்டையின் மஞ்சள் கரு

1/2 கப் தண்ணீர்

1 கப் பால்

1/2 டீஸ்பூன் உப்பு

1 கப் ஆட்டா

(பொதுவாக மைதா தான் பயன்படுத்துவார்கள். ஹெல்தியாக இருக்க ஆட்டா பயன்படுத்த சொல்லி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆட்டாவிற்கு பதில் மைதாவை பயன்படுத்துங்கள்)

1/2 கப் நுடெல்லா

ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் என உங்களுக்கு பிடித்த பழங்களை மெலிசாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

 

செய்முறை

வெண்ணெய்யை உருக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு பாத்திரத்தில் முட்டை, முட்டையின் மஞ்சள் கரு, தண்ணீர், பால், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மெதுவாக கலக்குங்கள்.

 

பின் மாவு சேர்த்து அது நன்றாக கலவையாகும் வரை கலக்குங்கள்.

 

மெதுவாக உருக்கி வைத்திருக்கும் வெண்ணெய்யை கலவையில் ஊற்றவும், தொடர்ந்து கலக்கவும்.

 

தோசைக்கல்லை அல்லது ஒரு panஐ மீடியம் ஹீட்டில் வைத்து, கலக்கிய மாவில் இருந்து ஒரு சின்ன கரண்டி அளவு மாவை கல்லின் நடுவே ஊற்றவும்.

கரண்டியால் மாவை பரப்புவதை விட, தோசைக்கல்லின் பிடியை கையில் பிடித்து தூக்கி, நன்றாக சுழற்றி, மாவு கல்லின் ஓரம் வரை செல்வது போல நன்றாக அசையுங்கள்.

(க்ரேப்ஸ் மெல்லியதாக இருக்க வேண்டும். எனவே முடிந்த அளவு தோசைக் கல் முழுவதும் மாவு பரவுவது போல சுழற்றுங்கள்)

 

இப்போது அது 2 நிமிடங்கள் வேகட்டும்.

பின் கரண்டி பயன்படுத்தி மெல்ல திருப்பி போடுங்கள். 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை இந்தப் பக்கமும் வேகட்டும்.

 

 க்ரீப்பை ஒரு தட்டில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் (அல்லது நீங்கள் விரும்பும் அளவுக்கு) நுடெல்லாவை எடுத்து நன்றாக அதன் மேலே பரப்பவும்.

 

நுடெல்லாவின் மேலே ஒரு ஸ்பூன் சிறிதாக நறுக்கிய பழத்தை சேர்க்கவும்.

 

க்ரீப்பை பாதியாக மடிக்கவும். பின்னர் மீண்டும் ஒரு முறை மடித்து முக்கோணத்தை உருவாக்குங்கள்.

அல்லது அதை ரோலாக உருட்டவும் செய்யலாம்.

 

சுவையான நுடெல்லா க்ரீப் தயார்!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.