(Reading time: 1 - 2 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - கோதுமை ரவை உப்புமா

தேவையான பொருட்கள்

1 கப் கோதுமை ரவா

1 வெங்காயம்

4 பச்சை மிளகாய்

¼ கப் விருப்பமான காய்கறி (நறுக்கியது)

2.5 கப் தண்ணீர்

உப்பு - தேவைக்கேற்ப

1/2 டீஸ்பூன் கடுகு

1 டீஸ்பூன் உளுந்து

2 டீஸ்பூன் கடலைப் பருப்பு

2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

கறுவேப்பிலை

 

செய்முறை

டாயில் எண்ணெயை சூடாக்கவும்.

 

கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும்.

 

கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

   

வெங்காயம் நிறம் மாறியதும், காய்கறிகளைச் சேர்த்து மீடியம் தீயில் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.

 

தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

 

தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், கோதுமை ரவாவை சிறிது சிறிதாக சேர்க்கவும். நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும்.

 

தண்ணீர் வற்றி உப்புமா பதம் வரும் வரை ஸ்டவ்வில் வைக்கவும். கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

  

சூடான சுவையான, ஆரோக்கியமான கோதுமை ரவை உப்புமா தயார்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.