(Reading time: 2 - 3 minutes)
Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத புளி ரசம்
Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத புளி ரசம்

Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத வெந்தயக் குழம்பு.

  

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – இரண்டு டேபிள் ஸ்பூன்

அரிசி – இரண்டு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – ½ ஸ்பூன்

ஜீரகம் – 1 டேபிள்ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 1

பூண்டு பல் – 15

நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்

தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

பெப்பர் தூள் – ½ ஸ்பூன்

ஜீரக தூள் – ½ ஸ்பூன்

புளி – சின்ன எலுமிச்சை அளவு

கறுவேப்பிலை, கொத்தமல்லி இழை – சிறிது

உப்பு – தேவைக்கு

   

செய்முறை

புளியை ¼ கப் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து, புளிக் கரைசல் தயார் செய்யவும்.

  

கடாயை சூடாக்கி, வெந்தயம் மற்றும் அரிசியை சேர்த்து நன்கு வறுக்கவும்.

   

வறுத்ததை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பவுடராக்கி கொள்ளவும்.

   

கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.

   

கடுகு வெடித்ததும், ஜீரகம், மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

  

இப்போது தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெப்பர் தூள், உப்பு மற்றும் ஜீரக தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

   

அனைத்தும் நன்று கலந்து, வதங்கியதும் தயாரித்து வைத்திருக்கும் புளி கரைசல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

   

மூன்று நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

   

பிறகு, அரைத்து வைத்திருக்கும் வெந்தய – அரிசி பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும்.

   

ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, கொத்தமல்லி இழை தூவி ஸ்டவ்வில் இருந்து இறக்கவும்.

  

சுவையான தக்காளி சேர்க்காத வெந்தயக் குழம்பு தயார்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.