(Reading time: 2 - 3 minutes)
Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத புளி ரசம்
Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத புளி ரசம்

Chillzee சமையல் குறிப்புகள் - தக்காளி இல்லாத புளி ரசம்

  

தேவையான பொருட்கள்:

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

புளி – சின்ன எலுமிச்சை அளவு

நசுக்கிய பூண்டு பல் – 5

11/2 டேபிள்ஸ்பூன் தனியா

½ டேபிள்ஸ்பூன் + ½ ஸ்பூன் ஜீரகம்

½ ஸ்பூன் மிளகு

¼ ஸ்பூன் வெந்தயம்

2 காய்ந்த மிளகாய்

½ ஸ்பூன் கடுகு

1/8 மஞ்சள் தூள்

கறுவேப்பிலை, சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி

பெருங்காயத் தூள் – சிட்டிகை அளவு

உப்பு – தேவைக்கு

   

செய்முறை

புளியை ¼ கப் வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து, புளிக் கரைசல் தயார் செய்யவும்.

  

ஒரு பாத்திரத்தை சூடாக்கி தனியா, வெந்தயம், மிளகு, 1 மிளகாய் மற்றும் ½ டேபிள்ஸ்பூன் ஜீரகம் சேர்த்து வறுக்கவும்.

  

மசாலா பொருட்கள் வறுப்பட்டதும், மிக்ஸியில் போட்டு நல்ல பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

  

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் ½ ஸ்பூன் ஜீரகம், கடுகு, 1 மிளகாய் சேர்க்கவும்.

  

பிறகு கறுவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். அதன் உடன் அரைத்த பவுடரை சேர்த்து வதக்கவும்.

  

3 கப் தண்ணீர், புளிக் கரைசல், நசுக்கிய பூண்டுப் பல், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.

  

ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.

 

பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி ஸ்டவ்வில் இருந்து இறக்கி விடவும். சூடான சுவையான தக்காளி இல்லாத புளி ரசம் தயார்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.