(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - Healthy Recipes - வதக்கிய வாழைப்பழங்கள்

செய்வதற்கு மிகவும் சுலபமான இந்த உணவு, ஆரோக்கியமானதும் கூட. எண்ணெய் மற்றும் சர்க்கரையை உங்களுக்கு வேண்டிய அளவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

  

தேவையான பொருட்கள்:

சாஸ் செய்ய தேவையானவை:

  

1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்

  

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

  

1 டேபிள்ஸ்பூன் தேன்

  

2 டேபிள்ஸ்பூன் பிரவுன் ஷுகர்

  

3 டேபிள்ஸ்பூன் கொழுப்பு குறைவான (அ) கொழுப்பு நீக்கிய பால்

  

1 டேபிள்ஸ்பூன் உலர் திராட்சை

  

வதக்க தேவையானவை:

  

4 வாழைப்பழங்கள் (தோராயமாக அரை கிலோ)

  

1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

  

2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சாறு

   

செய்முறை

முதலில் சாஸ் தயாரிக்க வேண்டும்.

 

ஒரு சிறிய வாணலியில் வெண்ணெயை மிதமான தீயில் உருகவும்.

  

இப்போது, எண்ணெய், தேன் மற்றும் பிரவுன் சுகரை சேர்த்து கலக்கவும்.

  

தொடர்ந்து கிளறி, சர்க்கரையை கரைய செய்யவும் - சுமார் 3 நிமிடங்கள்.

  

பாலை 1 டேபிள்ஸ்பூன் ஆக சேர்க்கவும். பின்னர் நன்றாக கிளறவும். சாஸ் சிறிது கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும். - சுமார் 3 நிமிடங்கள்.

  

அடுப்பில் இருந்து இறக்கி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறவும்.

  

அதை ஒதுக்கி ஓரமாக வைக்கவும்.

  

வாழைப்பழங்களை உரித்து, ஒவ்வொன்றையும் 3 துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டையும் நீளமாக பாதியாக வெட்டுங்கள்.

  

ஒரு பெரிய நான்ஸ்டிக் வாணலியை மிதமான சூட்டில் வைக்கவும். சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.

  

அதில் வாழைப்பழங்களைச் சேர்த்து, அவை பிரவுன் நிறமாகத் தொடங்கும் வரை வதக்கவும் - 3 முதல் 4 நிமிடங்கள்.

  

அதை ஒரு தட்டில் எடுத்து மாற்றி வைக்கவும்.

  

வாணலியில் ஆப்பிள் ஜூஸை சேர்த்து, லேசாக கொதிக்க விடவும். கடாயில் ஏதாவது ஒட்டிக் கொண்டிருந்தால் கரண்டி பயன்படுத்தி கிளறி எடுக்கவும்..

  

ஜூஸ் பாதி குறையும் வரை கொதிக்க விடவும் - சுமார் 30 முதல் 45 வினாடிகள்.

   

பிறகு வாழைப்பழங்களை மீண்டும் வாணலியில் சேர்க்கவும்.

  

பரிமாற, வாழைப்பழங்களை தனி தனி கிண்ணங்களில் வைக்கவும். மேலே சூடான சாசை தூவி உடனடியாக பரிமாறவும்.

  

DASH டையட்  பின்பற்றுபவர்களும் இதை உண்ணலாம்.

  

DASH டையட் ந்யூட்றிஷன் விபரம்:

  

DASH டையட் பற்றி தெரிந்துக் கொள்ள க்ளிக் செய்யுங்கள்.

  

பரிமாறும் அளவு: சுமார் 1 1/2 தேக்கரண்டி சாஸுடன் 4 துண்டுகள் வாழைப்பழம்

  

இனிப்பு – 1 செர்விங்

  

கொழுப்பு மற்றும் எண்ணெய் – 1

  

பழங்கள் – ½ செர்விங்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.