(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - Healthy Recipes - ஈசி ஓட்ஸ் ப்ரேக்ஃபாஸ்ட்

செய்வதற்கு மிகவும் சுலபமான இந்த காலை உணவை முந்தைய நாள் இரவே தொடங்கி விட வேண்டும். ஆனால் செய்வதற்கு ஐந்து நிமிடம் தான் தேவைப்படும்! இதில் கேல்சியம், ப்ரோடீன், பைபர் அனைத்தும் கிடைக்கிறது.

  

தேவையான பொருட்கள்

1/3 கப் ஓட்ஸ் (old-fashioned)

  

3 டேபிள்ஸ்பூன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் (fat-free milk)

  

3 டேபிள்ஸ்பூன் கொழுப்பு நீக்கப்பட்ட (அல்லது) குறைந்த கொழுப்புள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிர்

  

1 டேபிள்ஸ்பூன் தேன்

  

1/2 கப் ஃபிரெஷ் பழங்கள்

  

2 டேபிள்ஸ்பூன் நறுக்கப்பட்ட வால்நட்

   

செய்முறை

ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ், பால், தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

  

பின், பழங்கள் மற்றும் வால்நட்டை மேலே சேர்க்கவும்.

  

பாத்திரத்தை மூடி இரவு முழுக்க பிரிட்ஜில் வைக்கவும்.

  

காலையில் எடுத்து காலை உணவாக உண்ணவும்.

   

டிப்ஸ்:

  

சில்லென்று உணவு உண்ண விரும்பாதவர்கள் பிரிட்ஜில் இருந்து சிறிது நேரம் வெளியே எடுத்து வைத்து சில்லிப்பு போனதும் உண்ணலாம்.

  

DASH டையட்  பின்பற்றுபவர்களும் இதை காலை உணவாக உண்ணலாம்.

  

DASH டையட் ந்யூட்றிஷன் விபரம்:

  

DASH டையட் பற்றி தெரிந்துக் கொள்ள க்ளிக் செய்யுங்கள்.

  

தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் – 2/3 செர்விங்

  

பழங்கள் – 1 செர்விங்

  

பால் உணவுகள் - 3/8 செர்விங்

  

நட்ஸ் – 3/8 செர்விங்

  

இனிப்பு – 1

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.