(Reading time: 2 - 4 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - வெந்தயப் பொடி ( சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது ) - தங்கமணி

தேவையான பொருட்கள்:-

1.வெந்தயம்---1/4(கால்)கிலோ

2.நீட்ட மிளகாய் வற்றல்--6 நம்பர்

3.மிளகு----சிறிதளவு (ஒரு இருபது எண்ணிக்கை)

4.சீரகம்--சிறிதளவு (நானகு விரலால் அள்ள வருவதில் பாதி)

5.பெருங்காயப் பவுடர் ---சிறிதளவு.

6.உப்பு--தேவைக்கேற்ப.

 

செய் முறை:-

முதல் நான்கு பொருட்க்களையும் வெறும் கடாயில்(எண்ணை அறவே வேண்டாம்) ஒன்றாகவே வறுக்க வேண்டும்.

வெந்தயம் படபட வென்று வெடிக்க ஆரம்பிக்கும் போது (கருகாமல் பார்த்துக் கொள்ளவும்) கடாயைக் கீழே இறக்கி வைத்து அதில் கொஞ்சம் பெருங்காயப் பொடியை சேர்க்கவும்.

இருக்கும் சூட்டிலேயே பெருங்காயம் பொரிந்து  விடும்.

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

பொருட்கள் கொஞ்சம் ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாய்(ரவா போல்)அறைக்கவும்.

இதோ மிக அருமையான கமகம வாசனையோடு கூடிய வெந்தயப் பொடி ரெடி.

 

உபயோகிக்கும் முறை;-

சுடச்சுட சூடான சாதத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயப்பொடியை சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணையோ நெய்யோ கலந்து சாப்பிட்டால்..

அடடா அவ்வளவு சுவையாக இருக்கும்.. கொஞ்சமும் கசக்காது.. கமகம மணமும் சுவையும் சாப்பிட்டால் தெரியும்.

 

பலன்கள்;-

சர்க்கரை நோயாளிகள் விடாமல் மூன்று மாதம் சாப்பிட்டுவர ரத்த்த்தில் சர்க்கரையின் அளவு நிச்சயம் கடுப்பாட்டுக்குள்வரும்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வருமமென்பது விதியாய் இருந்தால் அதைத் தவிற்க முடியாதே தவிர தள்ளிப் போடலாம்.

இயற்கயிலேயே வெந்தயத்தில் fibre இருப்பதாலும் அயர்ன் சத்து இருப்பதாலும் உடலுக்கு மிக நல்லது.

பிடித்தவர்கள் செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்.உண்மை என்பதை நான் என் அனுபவத்தில் அனுபவிக்கிறேன்.

*ஷுகருக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள் அதனைத் தொடர வேண்டும் கட்டாயம்.

 

அடுத்து பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக அதிக செலவில்லாத நிறைந்த பயனளிக்கும் பௌஷ்ட்டிக லட்டு மற்றும் சிமிழி உருண்டை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.