(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - பௌஷ்டிக லட்டு - தங்கமணி

தேவையான பொருட்கள்:-

1.தோல் நீக்காத உருண்டைப் பச்சைப் பயறு----1/2 கிலோ(அரைக் கிலோ)

2.பொட்டுக்கடலை----100 கிராம்.

3.நிலக்கடலை வறுத்தது---100 கிராம்

4.சிகப்பு அவல் (கிடைத்தால்)--100 கிராம்

5.பாதாம்----20 எண்ணிக்கை.

6.பச்சரிசி----ஒரு கைப்பிடி அளவு.

7.முந்திரி----10 எண்ணிக்கை.

8.பாகு வெல்லம்-----1/2 கிலோ.

9.தேங்காய் மூடி---1 எண்ணிக்கை.

10.ஏலம்----5 எண்ணிக்கை.

11.வனஸ்பதி(டால்டா)--200 மில்லி.

12.சுக்குப் பொடி ----சிறிதளவு

 

செய் முறை:-

1.முதலில் பச்சைப் பயறை சிவக்க வறுத்துக்கொள்ளவும்.

2.பொட்டுக்கடலையை வறுத்துக்கொள்ளவும்.

3.பச்சரிசியை சிவக்கவும்--அவலை லேசாகவும் வறுத்துக்கொள்ளவும்.

4.நிலக்கடலை மற்றும் பாதாமை வறுக்க வேண்டாம்.

5.வறுத்த பயறு,பொட்டுக்கடலை,நிலக்கடலை,சிகப்பு அவல்,பச்சரிசி,பாதாம் இவற்றை ஒன்றாகக் கலந்து மெஷினில் நைஸாக அறைத்து வரவும்.

6.லட்டு செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வெல்லத்தை தண்ணீரில் போட்டு கரைய  விடவும்.ஏலத்தைப் பொடித்துக் கொள்ளவும்.

7.தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.

8. வீட்டில் வழக்கமாய் பாகு வைக்கும் பாத்திரத்தில் வெல்ல நீரை (வடிக்கட்டியபிறகு) ஊற்றி அத்துடன் துருவிய தேங்காயைப் போடவும் பொரி உருண்டை செய்வதற்கு பாகு காய்ச்சுவதைப் போல் கொஞ்சம் கெட்டியான பாகு கிடைக்கும்வரை காய்ச்சவும். (.இடைப்பட்ட நேரத்தில் டால்டாவை குறைந்த தீயில் உருகவிடவும்)

9. அறைத்து வந்த மாவை கொஞ்சம் அகலமான பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஏலப்பொடி சுக்குப்பொடியைக் கலக்கவும்..பாகு ரெடியானதும் பாகினை மாவில் ஊற்றி நன்றாகக் கிளரவும்..

10. பின் உருகிகொண்டிருக்கும் சூடான டால்டாவை ஒரு கரண்டி எடுத்து பாத்திரத்தில் உள்ள மாவில் ஒரு பகுதில் ஊற்றி மாவு ஓரளவு சூடாக இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும் இது போலவே கொஞ்சம் கொஞ்சமாக உருகிய சூடான டால்டாவை பகுதி பகுதியாய் மாவில் ஊற்றி பிடிக்கவும்..மாவு ஆறிவிட்டால் பிடிக்க வராது.

 

குறிப்பு:-

உருண்டைகளை ரவா லட்டு போல் நேர்த்தியாக அழகாகப் பிடிக்காமல் கொஞ்சம் பள்ளமும் மேடுமாய் அழகில்லாத ஷேப்பில் ..நன்றாக அழுத்திப்பிடிக்கவும்.இப்போது பௌஷ்ட்டிக லட்டு தயார்.இதை கிராமங்களில் பொரிவிளங்காய் உருண்டை,கெட்டி உருண்டை என்றும் சொல்வதுண்டு.

இதைச் சட்டென கடித்துத் தின்றுவிட முடியாது.வாயின் ஓரத்தில் ஒன்றை எடுத்து அடக்கிக் கொண்டு வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தால் எல்லாவேலையும் முடிந்துவிடும் இது தீராது.

கொஞ்சம் கொஞ்சமாக உமிழ் நீருடன் இதன் ருசியும் வாசனையும் கலக்க கலக்க கலக்கலாயயிருக்கும்.ஊட்டம் தரும் அனேகப் பொருட்கள் இதில் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நல்லது.

ம்ம்ம்..இந்த காலத்துக் குழந்தங்க..இதெல்லாம் சாப்பிடுமா.? பீட்ஸா,பர்கர்,பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்ட சிப்ஸ்..இன்னும் கண்ட கண்டத சாப்டு ஒபேசிடி,வயிற்றுக் கோளாறுன்னு.. என்னவோ..எழுதிருக்கேன்..ஒக்கேன்னா செய்யுங்க....

 

அடுத்து கறுவேப்பிலை பூண்டு மிளகு குழம்பு(பத்தியக்குழம்பு)மற்றும் முட்டைகோஸ் டேஸ்டி பால்ஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.