(Reading time: 3 - 5 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி - தங்கமணி

தேவையான பொருட்கள்:-

1.புளி---எலுமிச்சம் பழ அளவு.

2.பூண்டு---பதினைந்து பல்.

3.கருவேப்பிலை---ஆறு ஏழு கொத்திலிருந்து உருவிய இலைகள்.

4.தனியா----4 ஸ்பூன்.

6.மிளகு----6 ஸ்பூன்.

7.நீட்ட மிளகாய் வற்றல்---4 எண்ணிக்கை.

8.ஜீரகம்----2 ஸ்பூன்.

9.துவரம் பருப்பு---3 ஸ்பூன்.

10.பெருங்காயம்--சிறிதளவு.

11.மஞ்சள் தூள்----ஒரு ஸ்பூன்.

12.கடுகு--ஒரு ஸ்பூன்.

13. நல்லெண்ணை--2 கரண்டி.

14. உப்பு---தேவையான அளவு.

 

செய் முறை:-

1.முதலில் புளியை ஊறப் போட்டுக்கொள்ளவும்.

2.தனியா,மிளகு,ஜீரகம்,துவரம்பருப்பு,மிளகாய் வற்றல் அனைத்தையும் சிறிது எண்ணைவிட்டு வறுக்கவும். இவை வறு படும் போதே லேசாக சிவக்க ஆரம்பித்ததும் பூண்டு பற்களையும் சேர்க்கவும் பூண்டு ஓரளவு வதங்க ஆரம்பிக்கும் போதே மற்ற பொருட்கள் நன்றாக சிவந்து விடும். உருவி வைத்திருக்கும் கருவேப்பிலையை இத்துடன் சேர்த்துக் கிளறினால் படபடவென்று பொரியும்.வாணலியைக் கீழே இறக்கிவிடவும்.

3.வறுத்த பொருட்களை மிக்ஸியில் தண்ணீர்விட்டு நைஸாக விழுதாக அறைத்துக்கொள்ளவும்.

4.கொஞ்சம் அடி கனமான பாத்திரத்தில் ஊறவைத்திருக்கும் புளியைக் கறைத்து ஊற்றவும்.

5.மஞ்சள் தூள் போடவும்..பெருங்காயம் சேர்க்கவும்.

6.ஒரு கொதி வந்ததும் அறைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.

7.தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

8.தீயை மிதமாக வைத்துக் குழம்பைக் கொதிக்க விடவும்.அடிக்கடி கிளறி விடவும்.

9.கொதிக்கும் போது கொஞ்சம் நல்லெண்னை ஊற்றவும்.

10.குழம்பு தள தளவென்று கொதித்து சுண்ட ஆரம்பிக்கும்.கொஞ்சம் டேஸ்ட் பார்க்கவும்.

எது குறைவாகவோ கூடுதலாகவோ இருக்கிறதோ அதை சரி செய்யவும்.சிலருக்குக் காரம் கூடுதலாக இருக்க வேண்டும்.அப்படி வேண்டுமெனில் சிறிது சாம்பார் பொடியைத் தண்ணீரில் கெட்டியாக் கறைத்து ஊற்றி கொதிக்க விடலாம.குழம்பு நன்றாக சுண்டி வந்ததும் ஒரு சின்னக் கரண்டி நல்லெண்ணையில் கடுகு போட்டு வெடிக்கவிட்டு குழம்பில் சேர்க்கவும்.

இப்போது மினுமினுக்கும் தளதள பூண்டு மிளகு குழம்பு ரெடி.சிலர் மிகச் சிறிய துண்டு வெல்லம் சேர்ப்பார்கள்.

குறிப்பு:-

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்தக் குழம்பு மிக நல்லது.மிளகு ரத்தத்தை சுத்தம் செய்வதொடு வயிற்றுப் புண்ணை ஆற்றும்.பூண்டு ஒரு கிருமி நாசினி மட்டு மல்லாது  தாய்ப் பால் அதிக அளவு சுரக்க உதவும்.ரத்த அழுத்தைத்தைக் குறைக்கும்.கருவேப்பிலையில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்தம் ஊரும்.இதில் இருக்கும் மற்ற அனைத்துப் பொருட்களும் உடலுக்கு நன்மை பயப்பவையே.மழைக் காலத்திற்கு ஏற்ற குழம்பு இது. சுத்தமான் பாத்திரத்தில் காற்று புகாமல் வைத்திருந்தால் ஒருவாரம் கூட கெடாது இருக்கும்.ஓரளவு பச்சை நிறத்தோடு இருக்கும் இக் குழம்பு பார்க்கவும் சுவைக்கவும் ஜோர்தான்.எல்லோருக்கும் எல்லா காலத்திற்கும் ஏற்றது.

பெரும்பாலோருக்கு இக் குழம்பு செய்யத் தெரிந்திருக்கலாம்.. செய்யத்தெரியாத ஓரிருவர் இருந்தால்  அவர்களுக்காக இது சொல்லப்பட்டதாக இருக்கட்டுமே...சரிதானே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.