(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - முந்திரி கொத்து - ரஞ்சி

munthiri Kothu

தேவையான பொருட்கள்

சிறுப்பயிறு (பாசிப் பயிறு) – 1 கிலோ

தேங்காய் – 3

வெல்லம் அலது கருப்பட்டி – ¾ கிலோ

ஏலக்காய் – 15

சுக்கு – 1 துண்டு

எள் – 2 டீஸ் ஸ்பூன்

பச்சரிசி மாவு – ½ கிலோ

மஞ்சள் தூள் – சிறிது

எண்ணெய் – தேவைக்கு

உப்பு – தேவைக்கு சிறிதளவு

செய்முறை

  1. முதலில் சிறுபயிறை (பாசிப் பயிறு) வறுத்து, ரவை போல் மிக்ஸி அல்லது அரவை மில்லில் கொடுத்து அரைத்து தூள் செய்துக் கொள்ளவும்
  2. தேங்காயை துருவி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
  3. ஏலக்காய் மற்றும் சுக்கை தூளாக பொடித்து வைக்கவும்
  4. எள்ளை வருத்துக் கொள்ளவும்
  5. வெல்லம் அல்லது கருப்பட்டியை தூள் செய்யவும்.
  6. சிறுப் பயிறு தூள், வருத்த தேங்காய், ஏலக்காய், சுக்கு தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  7. வேறு ஒரு பாத்திரத்தில் தூள் செய்த வெல்லத்தை போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  8. வெல்லம் கரையும் வரை மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கிளறி விடவும்.
  9. காய்ச்சிய வெல்லப் பாகை சூடாக இருக்கும் போதே, மேலே கலந்து வைத்திருக்கும் சிறுப்பயிறு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறி விடவும்.
  10. உருண்டை பதம் வந்த உடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  11. இன்னுமொரு பாத்திரத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள் மற்றும் மிகவும் சிறிதளவு உப்பை கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  12. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நான்கைந்து உருண்டைகளை எடுத்து மாவில் முக்கி எண்ணெயில் போடவும்.
  13. அடுப்பை சிறியதாக வைத்து, ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு பொன்னிறமாக ஆனதும் எடுத்துக் கொள்ளவும்.
  14. சுவையான முந்திரி கொத்து தயார்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.