(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - மிளகு ரசம் - நந்தினி

 Rasam

தேவையான பொருட்கள்

தக்காளி - 1 பெரியது

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

பூண்டு – 2 பல்

மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

சாம்பார் தூள் - 1/2 ஸ்பூன் 

உப்பு ,கறுவேப்பிலை-தேவையான அளவு

நெய் / எண்ணெய் - 1 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிது

 

செய்முறை

  1. புளியை தண்ணீரில் ஊற வைத்து ஒரு கப் புளி கரைசல் தயார் செய்துக் கொள்ளவும்.
  2. ஜீரகம், மிளகு, பூண்டு மூன்றையும் சிறிது நசுக்கி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் புளி கரைசல், சிறிதாக வெட்டப் பட்ட தக்காளி, சாம்பார் தூள், மஞ்சள் தூள். கறுவேப்பிலை, நசுக்கிய ஜீரகம், பூண்டு, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. கொதிக்க தொடங்கியதும் ஸ்டவ்வை குறைத்து வைத்து புளியின் பச்சை வாசனை போகும் வரை வைக்கவும்.
  5. பின் ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
  6. கொதிக்க விடாமல், நுரை போல வரும் பொழுது, சிறிதாக வெட்டி வைத்த கொத்தமல்லி சேர்த்து ஸ்டவ்வை அணைத்து விடவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கி, கடுகு சேர்க்கவும்.
  8. கடுகு வெடித்த உடன், மிளகாய், கறுவேப்பிலை சேர்த்து சில வினாடிகள் தாளித்து, அதை ரசத்தில் ஊற்றவும்.
  9. சூடான மிளகு ரசம் தயார். இதை சாதத்துடனும் பரிமாறலாம், இல்லை என்றால் அப்படியே குடிக்கவும் செய்யலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.