(Reading time: 2 - 3 minutes)

Chillzee சமையல் குறிப்புகள் - அவசர சமையல் - 04. தால் - ஜான்சி 

 

ஹாய் பிரண்ட்ஸ்,

இந்த ரெசிபி ரொம்பவும் எளிமையானது அதே நேரம் சுவையானது.சோறு கூட இந்த தால் செய்யும் போது கூட்டுக்கு அப்பளம் மட்டும் போதும் ஈஸியா வேலை முடிஞ்சிடும். சப்பாத்திக்கும் கூட்டு மாதிரி தால் பரிமாறலாம்.

தேவையானவை:

( கொடுக்கப் பட்டுள்ள அளவு 2 பேருக்கு போதுமானது)

மைசூர் பருப்பு 150 கி

மிளகாய் வற்றல் 4

வெங்காயம் 1

தக்காளி 1

பச்சை மிளகாய் 2

மஞ்சள் தூள் சிறிதளவு

உப்பு சுவை கூட்ட தேவையான அளவு

கொத்துமல்லி தழை பொடியாக நறுக்கியது சிறிதளவு.

தாளிக்க: எண்ணை, கடுகு, சீரகம், வெங்காயம் , கறிவேப்பிலை.

செய்முறை:

மைசூர் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, 2 ஆக கீறிய பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

குக்கரில் இருப்பவை வெந்ததும் விசில் எடுக்க வரும்வரைக்கும் தாளிக்க காத்திருக்கவும்.

தாளிக்க கடாயில் எண்ணை காய விடவும். கடுகு, சீரகம் வெடித்ததும், மிளகாய் வற்றலை துண்டுகளாக பிய்த்து போடவும், வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள் உப்புச் சேர்த்து , குக்கரிலுள்ள பருப்பைச் சேர்த்து போதுமான அளவு தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்துமல்லித் தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.