Chillzee சமையல் குறிப்புகள் - இனிப்பு சேவை / இனிப்பு இடியாப்பம் – ஆர்த்தி R
தேவையான பொருட்கள்
வெல்லம் – 1
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
ஏலக்காய் பொடி சிறிதளவு
அரிசி வெள்ளை சேவை/இடியாப்பம்
செய்முறை
தேவையான அளவு அரிசி சேவை (வேக வைத்த வெள்ளை இடியாப்பத்தை )எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை நன்கு பொடித்து வைக்கவும்.
மிதமான சூட்டில் கடாயில் சிறிதளவு தண்ணிர் விட்டு தண்ணிர் கொதித்ததும் பொடித்த வெல்லத்தை போடவும்.
வெல்ல நீரை வடிகட்டி மீண்டும் அடுப்பில் ஏற்றவும்.
தேங்காய் துருவல் , ஏலக்காய் பொடியை சேர்க்கவும்...
பாகு போல் கெட்டி ஆனவுடன் வெள்ளை சேவை/இடியாப்பத்தை போட்டு நன்கு கலக்கவும்.
சூடான இனிப்புச் சேவைத் தயார்
[வெள்ளை இடியாப்ப அளவிற்கேற்ப வெல்லத்தின் அளவு மாறுபடும். ]
FRIENDS இது நா எங்க அக்கா வீட்லேந்து கத்துகிட்டது.....நானும் TRY பண்ணேன் நல்லா வந்தது....நீங்களும் TRY செய்து பாருங்கள்