(Reading time: 2 - 3 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 24 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா

லர்ந்த பழங்களை (Dry Fruits) ஈசியாக நறுக்க, முதலில் அவற்றை ஒரு மணி நேரம் பிரீசரில் வையுங்கள். பின் கத்தியை சூடான தண்ணீரில் நனைந்து வெட்டுங்கள். சுலபமாக இருக்கும்.
  
பூரி தயார் செய்யும் போது, அதற்கான மாவை உருட்டி சுத்தமான, ஈரமான மஸ்லின் துணியின் நடுவே ஒரு மணி நேரத்திற்கு முன்னால் வைத்துக் கொள்ளலாம். மாவு காயாமல் இருக்கும். உணவு நேரம் வரும் போது சுட சுட சுட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
  
குழம்பு தயார் செய்யும் போது சுவையாகவும், நல்ல கலராக வர, பழுத்த தக்காளிகளை மட்டும் பயன்படுத்துங்கள். தக்காளிகளில் பச்சை பகுதிகள் இருந்தால் அதை நீக்கி விடுங்கள்.
 
க்காளியின் தோலை ஈசியாக உரிக்க, ஒரு பெரிய பாத்திரத்தில் தக்காளிகளை வைத்து, கொதிக்கும் நீரை அதில் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் மூடி வையுங்கள். பின், ஒவ்வொன்றாக வெளியே எடுத்து, கூரான கத்தியால் துளைத்தால், தோல் எளிதில் வரும்.
 
சாதம் மீதி வந்தால் அதை கொட்டி வீணாக்காமல் பிரிட்ஜில் வையுங்கள். மறுநாள் கேரட் ரைஸ், பீட் ரூட் ரைஸ், மாங்காய் சாதம் என உங்களுக்கு பிடித்த வெரைட்டி ரைஸ் செய்ய பயன்படும்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.