Cooking Tips # 23 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா
சமைத்த / வேக வைத்த பாசி பருப்பு மீதம் வந்தால் அதை வைத்து பருப்பு சப்பாத்தி தயார் செய்யலாம்.
உருளைகிழங்கை இருபது நிமிடங்கள் உப்புத் தண்ணீரில் ஊற வைத்தால் சீக்கிரம் வேகும்.
இஞ்சி பூண்டு பேஸ்டிற்கு பதில் அரைத்த இஞ்சி, பூண்டு சேர்ப்பதாக இருந்தால், பூண்டு 60%ம் இஞ்சி 40%ம் சேருங்கள். இல்லையென்றால் இஞ்சியின் வாசனை தூக்கலாக இருக்கும்.
பக்கோடா செய்யும் போது கடலை மாவுடன் சிறிது சோள மாவு (corn flour) சேர்த்தால், பக்கோடா மொறு மொறு என்று வரும்.
மீன், இறால் போன்றவற்றை சமைக்கும் போது, அவற்றை வேக வைக்கும் முன் கொஞ்சம் உப்பும், எலுமிச்சை சாரும் எடுத்து அதில் தேயுங்கள். பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு, மீண்டும் ஒரு முறை கழுவி சமையுங்கள். இப்படி செய்தால் மீன், இறால் வாசனை தெரியாது