Cooking Tips # 22 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா
காய்கறிகளின் தோலுரிக்கும் முன் அல்லது வெட்டுவதற்கு முன் அவற்றை நன்றாக தண்ணீரில் கழுவுங்கள். இப்படி செய்தால் அவற்றில் இருக்கும் வைட்டமின்களை (water soluble vitamins) பாதுகாக்கலாம்.
சமைக்கும் போது எண்ணெய் நன்றாக சூடானப் பிறகே மசாலா பொருட்கள், காய்கறிகளை சேருங்கள்.
கிரேவி அதிக சுவையோடு இருக்க, எண்ணெய்க்கு பதில் நெய் அல்லது வனஸ்பதியை பயன்படுத்துங்கள் அல்லது எண்ணெயுடன் நெய் / வனஸ்பதியை கலந்துப் பயன்படுத்துங்கள்.
கிரேவியில் தண்ணீர் சேர்க்க வேண்டி இருந்தால், எப்போதும் சூடான நீரைச் சேர்க்கவும். இது கிரேவிக்கு அதிக சுவையைக் கொடுக்கும்.
கோழி அல்லது இறைச்சியை சமைக்கும்போது, முதலில் ஹை ப்ளேமில் வைத்து சமைக்க வேண்டும். பின்னரே லோ பிளேம் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் இறைச்சியில் இருக்கும் சாறு நன்கு கலந்து வேகும்.