(Reading time: 2 - 3 minutes)
Cooking Tips
Cooking Tips

Cooking Tips # 21 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ்

பரபரப்பான நாட்களுக்கான டிப்ஸ்

 

க்காளிக்கு பதிலாக தக்காளி பேஸ்ட் அல்லது தக்காளி சாஸ் பயன்படுத்தினால் தக்காளி வெட்டும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

 

கொண்டைக்கடலையை ஊற வைக்க மறந்து விட்டால், நல்ல சூடான நீரில் ஊறவைக்கவும். இப்படி செய்தால் கடலையை 1 மணிநேரம் ஊற வைத்தால் மட்டுமே போதும்.

 

ஞ்சி பூண்டு விழுது மொத்தமாக செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இதேபோல், பச்சை மிளகாயையும் பேஸ்ட் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இது சமையல் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

 

ங்கள் கிரைண்டருடன் வரும் சப்பாத்தி மாவு கருவி பயன்படுத்தி அதிக அளவில் சப்பாத்தி மாவை தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். இதை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து, ஜிப்லாக் கவர்களில் போட்டு ப்ரீஸ் செய்து வைத்துக் கொள்ளவும். உங்களுக்கு தேவையான போதெல்லாம், ஒரு கவரை எடுத்து, சிறிது நேரம் வெளியே வைத்து பயன்படுத்துங்கள். தரமான மாவு பயன்படுத்தினால், ஒரு மாதத்திற்கும் மேலாக நன்றாக இருக்கும்.

 

காய்கறிகளை நறுக்கும்போது, மொத்தமாக நறுக்கி விடுங்கள்! அப்போதைக்கு  தேவையானதை பயன்படுத்தி விட்டு, மீதமுள்ளவற்றை ப்ரிட்ஜில் வைத்து தேவையானப் போது எடுத்து பயன்படுத்துங்கள்!

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.