Cooking Tips # 26 - சமைக்கும் நேரம் பயன்படும் சூப்பர் டிப்ஸ் - வீணா
உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காயை நறுக்கியப் பிறகு தண்ணீரில் ஊற வைத்தால், நிறம் மாறாமல் இருக்கும்.
ஆப்பிளை வெட்டியப் பிறகு துண்டுகளின் மீது சிறிது எலுமிச்சை சாறு தடவி வைத்தால், பிரவுன் நிறம் வராமல் நீண்ட நேரம் பிரெஷ்ஷாக இருக்கும்.
வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு, பாதியாக வெட்டி பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வையுங்கள். இப்போது நறுக்கினால் கண்ணீர் வராது.
அரைத்த மசாலாவை வறுக்கும் போது எப்போதுமே சிம்மில் வைத்து வறுத்து எடுங்கள். அப்போது தான் மசாலாவின் சுவையும், நிறமும் சரியாக இருக்கும்.
கசகசாவை மிக்ஸியில் அரைக்க வேண்டி இருந்தால் 10 – 15 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைத்து அரையுங்கள்.