வீட்டுக் குறிப்புகள் - 29 - சசிரேகா
பீரோ லாக்கரில் வெள்ளிச் சாமான்களை வைப்பவர்கள் மெல்லிய ப்ளைவுட் பெட்டி செய்து அதில் வைத்தால் பாத்திரம் கறுக்காது
தங்கம் வெள்ளி நகைகளை பல் தேய்க்கும் பிரஷில் பல் துலக்கும் பசையைத் தடவி அதைக்கொண்டு சிறிதுநேரம் மென்மையாக தேய்த்தால் சிறிது நேரத்தில் அந்த நகைகள் பளிச்சிடும்
தங்க நகைக்கு பாலீஷ் போடுவதற்கு முன்னால் வீட்டிலிருக்கும் அழி ரப்பரை(எரேசர் ரப்பர்) எடுத்து நகையின் மீது நன்றாக தேய்த்தால் போதும் பாலீஷானது போல இருக்கும். பிசுக்கு படிந்த நகைகளை சுத்தம் செய்ய நாம் பயன்படுத்தும் ஷாம்பு உபயோகித்தால் போதும் பிசுக்கு நீங்கி புத்தம் புதிதாக மாறும்
குழந்தைகள் பள்ளிக்கு சென்று வந்ததுமே வாட்டர் பேக் மூடியைத் திறந்து வைத்துவிட வேண்டும் அப்போதுதான் வாடையில்லாமல் இருக்கும் இல்லையென்றால் புழுங்கல் வாடை அடிக்கும்
வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளவர்கள் ப்ளஷ் டாங்கின் உள்ளே தண்ணீரில் மூழ்குமாறு நாம் பயன்படுத்தும் சிறிய சோப் துண்டுகளை கயிறில் கட்டி தொங்கவிட்டால் டாய்லெட் பளிச் நறுமணமும் கிடைக்கும்