(Reading time: 2 - 3 minutes)

வீட்டுக் குறிப்புகள் - 30 - சசிரேகா 

ரு பாட்டிலில் இருந்து இன்னொரு பாட்டிலுக்கு எண்ணெய் மாற்றும் போது வழிந்து தரையில் விழாமல் இருக்க பாட்டிலின் வாயில் ரப்பர் பேண்ட் போடவும்

ஃப்ளாஸ்கில் பால் காப்பி டீ என எதை ஊற்றி வைத்தாலும் அதில் சர்க்கரை சேர்க்காமல் ஊற்றி வையுங்கள் சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் பல மணி நேரங்கள் கெடாமல் இருக்கும்.

1 வாரம் அல்லது அதற்கு மேல் வெளியூர் செல்ல வேண்டியிருந்தால் நாம் பயன்படுத்தும் டாய்லெட் பாத்ரூம் வாஷ்பேஷின் சிங் இவற்றில் கொஞ்சமாக பினாயிலை ஊற்றி விட்டு செல்லுங்கள் திரும்பி வரும் போது நாற்றம் அடிக்காமல் இருக்கும்

ப்ளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகிவிட்டால் அதில் பழைய டூத் பிரஷ்ஷை நெருப்பில் உருக்கி அதில் இருந்து வரும் மெழுகை அந்த ஓட்டை மீது ஊற்றினால் விரைவில் அந்த ஓட்டை அடைப்பட்டு விடும்

வீட்டின் வாசற்படி மற்றும் ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் கெரோசினைத் தொட்டுத்த தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு வந்துவிடும்

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.