வீட்டுக் குறிப்புகள் - 31 - சசிரேகா
உடையில் சென்ட் அடித்துக் கொள்வதால் கறை ஏற்பட்டிருந்தால் வெள்ளை வினிகரில் 30 நிமிடம் ஊற வைத்து துவைத்தால் அந்த சென்ட் கறை போய்விடும்
குளிர்காலத்தில் துணிகளில் பூஞ்சை வாடை அடிப்பது வழக்கம் எலுமிச்சை சாறு தண்ணீரில் அந்த துணிகளை ஊற வைத்து அலசாமல் அப்படியே உலர்த்தி எடுத்தால் வாடை போய்விடும்
எவர்சில்வர் பாத்திரங்களை விபூதி கொண்டு வாரத்திற்கு ஒரு முறை நன்கு தேய்த்துப்பாருங்கள் ஈரமில்லாமல் நன்றாக பளபளக்கும்
தண்ணீரை கொதிக்க வைக்கும் ஸ்டீல் பாத்திரங்களில் வெண்மையான கறை படிந்துவிடும் அதைப் போக்க அந்த பாத்திரத்தில் 2 நாட்கள் அரிசியை ஊறவைத்தால் கறை மறைந்துவிடும்
பழுப்பேறிய மஞ்சளாகிய வெள்ளைத்துணியை வெண்மையாக்க எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து அதை வாளி நிறைய சுடுதண்ணீரில் சேர்த்து கலக்கி அதில் அந்த துணிகளை ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் அந்த பழுப்பு நிறம் மாறிவிடும்