வீட்டுக் குறிப்புகள் - 37 - சசிரேகா
மழைக்காலம் பனிக்காலத்தில் உப்பு போட்டு வைக்கும் ஜாடிகளில் ஈரம் கசிவது சகஜம் அதில் 3 பச்சை மிளகாய் போட்டு வைத்தால் கசிவு ஏற்படாது.
ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கடுகு போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் அதில் உள்ள கெட்ட வாடை நீங்கும்
டிபன் பாக்ஸ் திறக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறதா குழாய் தண்ணீரை திறந்து அந்த தண்ணீரில் சிறிது நேரம் டிபன் பாக்ஸ் பிடித்து வைத்தால் சட்டென மூடி திறந்துவிடும்
ஈக்கள் – புதினா இலைகளை மிக்சியில் அரைத்து அந்த நீரை தெளித்தால் ஈக்கள் ஓடிவிடும் ஈக்களுக்கு புதினா வாசம் அலர்ஜி அதனால் ஈக்கள் தொல்லை இருக்காது
ஈக்கள் – ப்ளீச்சிங் பவுடர் அல்லது சமையல் சோடா அல்லது கெரோசின் இந்த 3ல் ஏதாவது ஒன்றை நீரில் கரைத்து தெளித்தால் ஈக்கள் வராது