வீட்டுக் குறிப்புகள் - 42 - சசிரேகா
கடலை மாவு சீயக்காய் மாவு சமமாக கலந்து வெள்ளிப் பாத்திரங்களை துலக்கி நீரால் அலசினால் பளபளப்பாக இருக்கும்
வெள்ளைத் துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிதளவு டேபிள் சால்ட் கலந்துவிட்டால் துணிகள் சுத்தமாக வெண்மையாக பளிச்சென்று இருக்கும்
கத்திரிக்கோலின் வெட்டும் பகுதியை கீழ் இருந்து மேலாக நான்கு ஐந்து முறைகள் ஒரு கண்ணாடி பாட்டிலின் மீது தேய்த்தால் கூர்மையாகவிடும்
இட்லி தோசைக்கு மிக்சியில் மாவு அரைக்கும் போது புழுங்கல் அரிசியை வெந்நீரில் ஊற வையுங்கள் கிரைண்டரில் அரைத்தது போல இருக்கும்
மிக்சியில் குழம்புக்கு அல்லது கூட்டுக்கு மசாலாவோ அல்லது தேங்காயோ அரைக்கும் போது சாதாரண நீரை விட குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர் ) பயன்படுத்தினால் மிக்சியின் மோட்டார் விரைவில் சூடாவதை தடுக்கலாம்