வீட்டுக் குறிப்புகள் - 43 - சசிரேகா
மீன், மட்டன், கோழி இவைகளை கழுவியபின் கையில் சிறிது புளிக்கரைசல் விட்டு தேய்த்து பின் சோப்பு போட்டு கழுவினால் நாற்றம் போய்விடும்
ஒவ்வொரு வாரமும் மிக்சி ஜாரில் சிறிது கல் உப்பு மட்டும் போட்டு அரைத்தால் மிக்சி பிளேடு கூர்மையாகும்
ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரினுள் ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதன் மீது ஐஸ் ட்ரேக்களை வைத்தால் ட்ரேக்கள் இருக்கமாக ஒட்டிக்கொள்ளாது எடுப்பதற்கு சுலபமாக இருக்கும்
காய்கறிகளை நன்றாக கழுவி ஈரம் போக துடைத்து ஒரு பாலித்தீன் பையில் போட்டு கட்டி ஆங்காங்கே துளை போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் காய்கறிகள் நீண்ட நாள் கெடாது
வாஷிங் மெஷினில் துணிபோடும் போது சர்ப் பவுடருடன் ஷாம்பு சிறிது சேர்த்து துவைத்தால் வாசனையாக இருக்கும்