வீட்டுக் குறிப்புகள் - 44 - சசிரேகா
க்ரைண்டரின் அடிப்பகுதியை மாதம் ஒரு முறை சுத்தம் செய்யும் போது அடிப்பகுதியில் நாப்தலின் உருண்டைகள் போட்டால் பூச்சிகள் எலிகள் நெருங்காது
சமையல் சோடாவை ஒரு கப்பில் போட்டு வைத்தாலும் பூச்சிகள் அண்டாது.
வினிகர் சிறிதளவு போட்டு ப்ரிட்ஜை துடைக்க வாசனையாகவும் சுத்தமாகவும் இருக்கும் பூச்சிகள் அண்டாது
ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் முழுக்க பொருட்கள் இருந்தால் தான் ஃப்ரீசர் சூப்பராக வேலை செய்யும் அதனால் காலி இடத்தில் பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும்
ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் தயிர் வைத்து மூடிவைத்துவிட்டால் கெட்டுப் போகாது தயிர் அதிகமாக புளிக்காது