(Reading time: 3 - 5 minutes)

தோட்டக்  குறிப்புகள் - வீட்டில் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளை வைத்தே உங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கக்கூடிய 7 காய்கறிகள்

நாம் வழக்கமாக சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளை பயன்படுத்தியே வீட்டில் எளிதாக காய்கறி செடிகளை வளர்க்க முடியும்.

அப்படி வீட்டில் வளர்க்கும் காய்கறிகள் ஆரோக்கியமானது.

 

கொத்தமல்லி இலை

கொத்தமல்லி இலை என்பது கிட்ட தட்ட அனைத்து உணவுகளிலும்  நாம்  பயன்படுத்துவது. இதை ஒரு தொட்டியில் அல்லது உங்கள் வீட்டில் மண் இருக்கும் இடத்தில் எளிதாக வளர்க்கலாம். கொத்தமல்லி விதைகளை நட்டு  வைத்தால் 7 முதல் 10 நாட்களில் செடி முளைத்து விடும்.

 

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வீட்டில் வளர்க்க எளிதான காய்கறிகளில் ஒன்றாகும். உருளைக்கிழங்கை நிறைய நாட்கள் பயன்படுத்தாமல் விட்டு வைத்தால் அது வேர் விடுவதை பார்க்க முடியும்.

ஒரு முழு உருளைக்கிழங்கை மண்ணில் அல்லது ஒரு தொட்டியில் புதைத்து வையுங்கள். உருளைக்கிழங்கு வேர்  விட்டு செடியாக சீக்கிரமே  வளரத் தொடங்கும்.

  

பூசணி

பூசணிக்காய்கள் எங்கும் முளைத்து வளரக் கூடியவை.

பூசணிக்காயில் இருந்து எடுக்கும் விதைகளை மண்ணில் புதைத்து விடுங்கள். சில நாட்களில் செடி முளைக்கும்.

  

காளான்கள்

காளான்களின் மேல் இருக்கும் தொப்பிகளை அகற்றி உங்கள் தோட்டத்தில் நட்டு வையுங்கள்.

காளான்கள் வளர சரியான சூழல் தேவை. எல்லாவற்றையும் நீங்கள் சரியாக செய்தால் அடுத்து காளான்  சமைக்கும் போது உங்கள் தோட்டத்து காளான்களையே நீங்கள்  பயன்படுத்தலாம்.

 

குடை மிளகாய்

குடை மிளகாயில்  நிறைய விதைகள்  இருப்பதால் வீட்டில் வளர்க்க  எளிதானது. ஒரு குடை மிளகாயில் இருந்து விதைகளை சேகரித்து, காய வைத்து, ஒரு தொட்டியில் அல்லது தோட்டத்தில் நட்டு வையுங்கள் . சீக்கிரமே குடை மிளகாய் செடி முளைப்பதை  பார்ப்பீர்கள்.

 

எலுமிச்சை

உங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் பிடிக்கும் என்றால், ஏன்  உங்கள் வீட்டிலேயே எலுமிச்சை மரம் வளர்க்க கூடாது?

எலுமிச்சை விதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சுத்தம் செய்து, நன்றாக காய வைத்து உங்கள் தோட்டத்தில் நடவும். முளை விடும் செடியை நன்கு பராமரித்து வளர்த்தால் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் உங்கள் வீட்டிலேயே உங்கள்  சொந்த எலுமிச்சை மரம் இருக்கும்.

 

தக்காளி

தக்காளியை வளர்க்க நீங்கள் தனியாக  விதைகளை வாங்க தேவையில்லை. சின்ன குச்சி பயன்படுத்தி தக்காளிக்குள் இருக்கும் விதைகளை எடுங்கள். அல்லது தக்காளியை பாதியாக வெட்டி அப்படியே நட்டு வையுங்கள்.  சீக்கிரமே தக்காளி செடி முளைத்து வருவதை காண்பீர்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.