(Reading time: 3 - 6 minutes)

தோட்டக்  குறிப்புகள் - சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்வது எப்படி?

க்யுலன்ட் செடிகள் அழகானவை. அவற்றை பராமரிப்பதும் சுலபம். ஆனால் சக்யுலன்ட் செடிகள் மற்ற செடிகளில் இருந்து வித்தியாசமானவை. எனவே சரியான விதத்தில் அவற்றை கவனித்துக் கொள்ளவிட்டால் அவை மடிந்துப் போகும்.

சக்யுலன்ட் செடிகளை கவனித்துக் கொள்ள இதோ சில டிப்ஸ்:

 

  1. சரியான மண்ணைத் தேர்வு செய்யுங்கள்

நுண்ணூட்டச்ச த்துக்கள் நிறைந்த நன்கு வடிகட்டிய மண்ணில் சக்யுலன்ட் செடிகள் சிறப்பாக வளர்கின்றன. இந்த பாலைவன தாவரங்களை சரியாக வளர்ப்பதற்கு உயர்தர சக்யுலன்ட் செடிக் கலவையைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் தோட்ட மண்ணின் இரண்டு பகுதிகளுடன் சரளை, பெர்லைட் மற்றும் கோகோபீட் ஒவ்வொன்றிலும் ஒரு பகுதி நன்கு கலந்து, தேவையான மண்ணை வீட்டிலேயும் தயார் செய்யலாம்.

 

  1. செடிகளை அவ்வப்போது சுற்றி, சுற்றி வையுங்கள்

சக்யுலன்ட் செடிகளை அவ்வப்போது சுழற்றுவது செடியின் அனைத்து பகுதியும் சமமான சூரிய ஒளியை பெறுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். இது செடிகள் வண்ணமயமாகவும் செழிப்புடன் வளர உதவும்.

 

  1. தண்ணீர் ஊற்றுவதை குறையுங்கள்

அதிகமாக தண்ணீர் ஊற்றுவது சக்யுலன்ட் செடிகள் மடிந்துப் போவதற்கான முக்கிய காரணம்.

இவை வறட்சியைத் தாங்கிக் கொள்ளக் கூடிய செடிகள் என்பதால் அவற்றுக்கு அதிகம் தண்ணீர் தேவையில்லை. மண் முழுவதுமாக வறண்டு போகும் போது மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும்.

 

  1. செடிகளை சுத்தம் செய்யுங்கள்

சக்யுலன்ட் செடிகள் காலப்போக்கில் இலைகளில் தூசி சேகரிக்கலாம். அது அவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும். அதனால் அவ்வப்போது மென்மையாக காட்டன் பயன்படுத்தி செடியில் இருக்கும் தூசியைத் துடைப்பது முக்கியம். காட்டனால் துடைக்க முடியாத இடங்களில் மென்மையான பெயின்ட் பிரஷ் பயன்படுத்தலாம்.

 

  1. நல்ல வடிகால் கொண்ட பூந்தொட்டியை பயன்படுத்தவும்

வேர் அழுகலை ஏற்படுத்துவதால் சக்யுலன்ட் செடிகளால் நீண்ட காலத்திற்கு தண்ணீரைத் தாங்க முடியாது. எனவே அதிகப்படியான நீர் தொட்டியிலிருந்து வெளி செல்ல போதுமான வடிகால் துளைகளைக் கொண்ட தொட்டியில் அவற்றை நட தவறாதீர்கள்.

 

  1. வெயில் அடிக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள்

சக்யுலன்ட் செடிகள் சூரியனை விரும்பும் தாவரங்கள். எனவே அவற்றை 3-5 மணிநேரம் பிரகாசமான, மறைமுக சூரிய ஒளியைப் பெறக்கூடிய இடத்தில் வைக்கவும். ஜன்னல் பக்கம் அல்லது பால்கனி போன்றவை சிறந்த இடங்கள்.

 

  1. செடி நனைய நீர் ஊற்றாதீர்கள்

மற்ற வீட்டு தாவரங்களைப் போலல்லாமல், சக்யுலன்ட் செடிகள் நனைவதுப் போல தண்ணீர் ஊற்றுவது தேவை இல்லை. மண்ணை சுற்றி தண்ணீர் ஊற்றினாலே போதும்.

 

  1. உரம்

2-3 மாதங்களுக்கு ஒரு முறை சீரான உரம் கொடுப்பது நல்லது. இது செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் அவற்றின் தோற்றத்தையும் பிரகாசமாக்கும்.

 

  1. பூச்சிகளை அகற்றவும்

சக்யுலன்ட் செடிகளுக்கான பூச்சிக்கொல்லி அல்லது சோப்பு நீரைப் பயன்படுத்தி செடிகளில் இருக்கும் பூச்சிகளை அகற்றுங்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.