(Reading time: 2 - 4 minutes)

Chillzee வீட்டுக் குறிப்புகள் - 01 - ஃப்ரிட்ஜ் பராமரிப்பு - Chillzee Team

Fridge care

குளிர்சாதனப் பெட்டி எனப்படும் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடே இப்பொழுது இல்லை என்று சொல்லலாம்.

நம்வாழ்வில் முக்கிய அங்கமாகிவிட்ட ஃபிரிட்ஜை சீராக பராமரிக்க வேண்டியது நம் கடமை.

ஆனால் நம்மில் பலரின் வீடுகளில் ஃபிரிட்ஜ் குப்பையாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கிறது.

அது போல் இல்லாமல் ஃப்ரிட்ஜை நல்ல முறையில் பராமரிக்க உங்களுக்காக சில டிப்ஸ்:

மூடி வையுங்கள்:

ப்ரிட்ஜில் எந்த மணமுள்ள பொருளை வைக்கும் போதும் அதை மூடி வையுங்கள்.

அதே போல உணவு பொருட்களை வைக்கும் போதும் மூடியே வையுங்கள்.

இதனால் ஃப்ரிட்ஜில் உணவு பொருட்களின் வாசனையோ மற்ற பொருட்களின் வாசனையோ வராமல் தடுக்கலாம்

பொருட்களை அந்தந்த இடங்களில் வையுங்கள்:

பிரிட்ஜில் முட்டை, பால், காய்கறி போன்ற சில பொருட்கள் வைக்கவென்றே இடம் குறிக்கப் பட்டிருக்கும்.

பொருட்களை அந்தந்த இடங்களில் வைப்பதினால் ஃப்ரிட்ஜ் சுத்தமாக இருக்கும். பொருட்களை எடுப்பதும் சுலபமாக இருக்கும்.

எந்த பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறீர்கள் என்று நினைவில் வையுங்கள்

பொதுவாக ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வருவதற்கு அதனுள் வைக்கப் பட்டிருக்கும் நீண்ட கால பொருள் ஏதேனும் தான் காரணமாக இருக்கும்.

ஃப்ரிட்ஜில் ஒரு பொருளை வைக்கும் போது அதை எவ்வளவு காலத்திற்கு (shelf time) பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அதை பயன்படுத்துங்கள் இல்லை ஃப்ரிட்ஜில் இருந்து அதை அப்புறப்படுத்துங்கள்.

சுத்தம்:

ரு மாதத்திற்கு ஒரு முறையேனும் ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்.

பொதுவாக சற்றே சூடான நீரை ஒரு சுத்தமான துணியில் தொட்டு ஃப்ரிட்ஜை துடைத்தாலே போதும்.

ஆனால் பொருட்கள் சிந்தி இருந்தாலோ அல்லது துர்நாற்றம் இருந்தாலோ பேக்கிங் பவுடரை பயன்படுத்தலாம்.

இரண்டாக நறுக்கிய எலுமிச்சை பழமும் ஃப்ரிட்ஜில் இருந்து துர்நாற்றத்தை அகற்ற உதவும்.

பிரிட்ஜை நன்கு சுத்தமாக பராமரிக்க மேலே சொன்ன டிப்ஸ் உதவும் என்று நம்புகிறோம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.