(Reading time: 2 - 4 minutes)

Chillzee வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 02 - இல்லத்தரசிகளுக்கு சில கூல் டிப்ஸ் - நந்தினி

Home care tips

இந்த குறிப்புகள் என்னுடைய அடுத்த வீட்டு முதியவர் ஒருவர் எனக்கு சொன்னது. வயதான காலத்தில் தனியாக வசிப்பவர் என்பதால், அவ்வப்போது பார்க்கும் போது நானும் பேசுவேன், அவரும் பேசுவார். அப்படி பேசும் போது நான் செய்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப ஏதேனும் குறிப்பு கொடுத்து அசத்துவார். அவற்றுள் சிலவற்றை இங்கே உங்களுடனும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். :-)

ங்களுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்தால் பரணில் இருந்து எடுக்கும் தூசு படிந்த ஷோகேஸ் பொருட்கள் (பூ, செடி) போன்றவற்றை சுத்தம் செய்வது கடினம்.

தூசு உங்களை தொல்லை செய்யாமல் இருக்க, அந்த பொருளை ஒரு பையில் போட்டு, கால் கப் உப்பு சேர்த்து, கைகளால் நன்கு குலுக்குங்கள்.

உப்பு உராய்வு தன்மை (abrasive) கொண்டது என்பதால் அந்த பொருட்களில் உள்ள தூசியை தனியே தட்டி எடுத்து விடும்.

 


ங்கள் ப்ரிட்ஜில் இருந்து அதிகமாக உணவு வாசனை அல்லது வேறு விரும்பத் தகாத வாசனை வர தொடங்கினால், சிறிது பேகிங் பவுடரை திறந்த பாத்திரத்தில் வையுங்கள்.

 


னிப்பின் அருகே எறும்புகள் வராமல் இருக்க சமையலில் பயன்படுத்தும் இலவங்கப் பட்டையை அந்த இனிப்பு இருக்கும் இடத்தை சுற்றி வையுங்கள்.

எறும்புகளுக்கு பட்டையின் மணம் பிடிப்பதில்லை, எனவே அந்த பக்கம் எட்டி பார்க்காது.

 


ங்கள் கார் கண்ணாடியில் பறவைகள் எச்சம் பட்டு விட்டால், சில சமயம் வைப்பர் அல்லது தண்ணீர் உதவாது.

அப்படி பட்ட நேரத்தில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிது சோடா ஊற்றி, அழுக்கான இடங்களில் ஸ்ப்ரே செய்யுங்கள்.

ஒரு நிமிடம் கழித்து பேப்பர் டவலில் மெல்ல துடைத்து எடுங்கள்.

எச்சம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும்.

 


Super cool Tip of the day!

Super cool Tips

வீட்டை சுத்தம் செய்யும் போது, டிராயர் இருக்கும் மேஜையின் கீழ் தூசாக இருந்தால், அந்த கனமான மேஜையை நகர்த்தாமல் அல்லது நீங்கள் கீழே குனிந்து கஷ்டப்பட்டு சுத்தம் செய்யாமல், அந்த மேஜையின் கடைசி டிராயரை வெளியே எடுத்து விட்டு, வேக்யுவம் கிளீனர் அல்லது துடைப்பம் கொண்டு சுத்தப் படுத்துங்கள்!

பின் மறக்காமல் அந்த டிராயரை மீண்டும் வைத்து விடுங்கள்!

சூப்பர் கூல் ரைட்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.