(Reading time: 2 - 3 minutes)

Chillzee வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 03 - கார் வைத்திருப்பவர்களுக்கு உதவும் 'டச் ரீச்' முறை - நந்தினி

கார் வைத்திருக்கும் பலரும், கார் கதவை திறக்கும் போது தங்கள் சுற்றுபுறத்தை கவனிப்பது இல்லை.

ஆனால் அப்படி கதவை திறக்கும் முன் பின்னால் இருந்து ஏதேனும் வாகனம் வருகிறதா அல்லது யாரேனும் நடந்து வருகிறார்களா என்று கவனத்துடன் பார்ப்பது மிகவும் முக்கியம்.

இதை செய்வதற்கு நெதர்லாந்த் மக்கள் பயன்படுத்தும் ‘டச் ரீச்’ முறையை நாமும் பழகலாம்.

டச் ரீச்

நெதர்லாந்தில் கார் ஓட்ட சொல்லி கொடுக்கும் போதே, கார் கதவை திறக்க கதவை விட்டு தள்ளி இருக்கும் கையை பயன்படுத்த சொல்லி கொடுக்கிறார்கள்.

உதாரணமாக, நீங்கள் டிரைவர் சீட்டில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது கார் கதவை திறக்க வலதுக் கையை பயன்படுத்தாமல் இடது கையை பயன் படுத்த வேண்டும்.

இப்படி செய்யும் போது நம் முகம் தானாக கதவு பக்கம் திரும்பும் & பின்னிருந்து வரும் வாகனங்களும் நம் பார்வை வட்டத்தில் விழும்.

எனவே இந்த முறையை பயன்படுத்தினால் தேவையற்ற விபத்துக்களை தவிர்க்கலாம்.

முயற்சி செய்து பாருங்கள்.

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.