(Reading time: 3 - 5 minutes)

Chillzee வீட்டு பராமரிப்புக் குறிப்புகள் - 05 - கெமிக்கல் நிறைந்த கொசு மருந்துகள் இல்லாமல் செடிகள் வளர்த்து கொசுக்களை விரட்டுவோம்.

கொசுக்களை துரத்த கொசுவர்த்தி துவங்கி பலவிதமான லிக்விட், மேட் என்று நாமும் பயன்படுத்துகிறோம்.

ஆனாலும் கொசுக்களின் தொல்லை விட்டதாக இல்லை.

இந்த கொசுக்களை துரத்த இயற்கை முறையை பின்பற்றினால் என்ன?

சில செடிகளுக்கு இயல்பாகவே கொசுக்களை துரத்தும் தன்மை உள்ளதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அப்படிப்பட்ட செடிகளை நம் வீட்டை சுற்றி வளர்த்தால், நம் வீடும் இயற்கை அழகுடன் மிளிரும், கொசு தொல்லையும் குறையும்.

 

தோ உங்களுக்காக கொசுக்களை விரட்டும் சில செடிகள்:

துளசி:

thulasi.jpg

ல பல நற்பலன்களை தருவது துளசி.

அவற்றுள் இயற்கை முறையில் கொசுவை துரத்துவதும் ஒன்று.

துளசி செடியை ஜன்னல், பால்கனி கதவு போன்ற இடங்களில் வைத்தால் கொசுக்கால் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்க முடியும்.

துளசியை சாரு எடுத்து உடலில் பூசிக் கொண்டாலும் கொசுக்கால் பக்கத்தில் வராது.

நீலகிரி தைலம், துளசி சாரு (1 கப்), தண்ணீர் (1 கப்) மூன்றையும் கலந்து கொசுக்கள் புழங்கும் மூளை முடுக்குகளில் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் அங்கிருந்து ஓடி விடும்.

 

புதினா:

mint.jpg

துளசியை போலவே கொசுக்களை விரட்டும் இன்னுமொரு இயற்கை கொடுத்த செடி புதினா.

புதினாவை வளர்ப்பது மிகவும் எளிது.

சமையலில் நாம் பயன்படுத்தும் புதினாவின் அடிபாகத்தை சின்ன தொட்டிகளில் நட்டு வைத்தாலே புதினா துளிர் விட்டு வளரும்.

இந்த் செடியையும் கொசுக்கள் வீட்டினுள் வரும் இடங்களில் வைத்தால் கொசுக்கால் வீட்டினுள் வராமல் தடுக்கலாம்.

புதினா கொசுக்களை மட்டுமல்லாமல் எலிகளை விரட்டும் சக்தி கொண்டது.

மேலை நாடுகளில் இதமான வாசனை வரும் எலிகொல்லிகளில் புதினாவையும் சேர்க்கிறார்கள்.

 

சாமந்திப்பூ

samanthi.jpg

து என்னவோ இந்த பூக்களின் வாசம் கொசுக்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.

எனவே சாமந்திப்பூவை கொண்டும் நீங்கள் கொசுக்களை துரத்தலாம்.

கொசு விரட்டும் மருந்துகள் பலவற்றிலும் சாமந்தி பூவையும் பயன்படுத்துகிறார்கள்.

இந்த செடியை தொட்டி அல்லது தரையில் வளர்க்கலாம்.

 

மக்கு மிகவும் பரிச்சயமான இந்த செடிகளை தவிர ரோஸ்மேரி, லேவண்டர், லெமன் க்ராஸ் போன்ற செடிகளுக்கும் கொசுவை விரட்டும் தன்மை உள்ளதாக சொல்கிறார்கள்.

 

கண்ட கண்ட கெமிக்கல் பயன்படுத்தாமல் செடிகளைக் கொண்டே கொசுக்களை விரட்ட முடிந்தால் நல்லது தானே!

முயற்சி செய்து பாருங்கள்!

 

 

 {kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.